ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் குழந்தையாக நடித்துள்ள இதயத்தை திருடாதே பிரபலம். இதோ அந்த புகைப்படம்.

By Arun · 24/3/2022

சமீபகாலமாகவே சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றனர். வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்கள் மக்கள் மத்தியில் பாப்புலராகி வருகின்றனர்.அந்த வகையில் சின்னத்திரை ஹீரோயின்களில் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருப்பவர் நடிகை ஹிமா பிந்து. ஹிமா பிந்து ஆந்திராவை சேர்ந்தவர். இவர் பீகாம் முடித்துள்ளார். தாத்தா, பாட்டி, அப்பா என அனைவருமே சினிமாவில் பிரபலமானவர்கள் என்பதால் இவருக்கு இயல்பாகவே நடிப்பு மீது அதிக ஆர்வம் வந்துவிட்டது.

இவர் சிறு வயதிலிருந்தே ஆக்டிங்,டான்ஸ் என பல துறைகளில் ஆர்வம் காட்டி வருகின்றார். மேலும், இவருக்கு படிக்கும்போதே திரைப்படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால், பெற்றோர்கள் இவருக்கு ரெட் சிக்னல் கொடுத்து விட்டார்கள். பின் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு படத்தில் நடிப்பதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இதயத்தை திருடாதே :

அதனால் இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதற்காக ஹிமா நடிக்க ஒப்பந்தம் சொன்னார். இவர் நடித்த முதல் படம் ’ஐ.ஆர் 8’. முதல் படத்திலே இவர் கதாநாயகியாக அறிமுகமானார். இதற்குப் பின் தான் இவர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் கலர்ஸ் தமிழில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே என்ற சீரியலில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக ஹீமா :

ஆனால், இவர் குழந்தை நட்சத்திரமாகவும் சினிமாவில் தோன்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவைப்பொறுத்தவரை எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது நடிகைகளாகஜொலித்து வருகிறார்கள். அதில் ஒரு சிலர் தற்போது சீரியலில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 'படையப்பா' படத்தில் கூட இவர் தோன்றி இருக்கிறார்.

ரஜினியின் படையப்பா :

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வந்த மாஸ் படங்களில் ஒன்று தான் படையப்பா. இந்த படம் 1999ஆம் ஆண்டு வெளிவந்தது. சூப்பர் ஸ்டாரருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, மணிவண்ணன் என பலர் நடித்திருப்பர்கள். ஆனால், படத்தில் மாஸ் என்றால் ஒன்று சூப்பர் ஸ்டார் மற்றோன்று நீலாம்பரி என்ற ரம்யா கிருஷ்ணன். படத்தில் ரஜினிக்கு இணையாக மாஸ் காட்டுவார் நீலாம்பரி.

படையப்பா பாடலில் ஹீமா :

இந்த படத்தில் சௌந்தர்யாவிற்கு முன் நக்மா தான் நடித்தார் ஆனால், பின் அவருக்கு பதிலாக தான் பின் சௌந்தர்யா நடிக்க வந்தார். என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்தில் இடம்பெற்ற 'என் பேரு படையப்பா' பாடலில் பாசமுள்ள மனிதரப்பா, நான் மீச வச்ச கொழந்தையப்பா என்ற வரி வரும் போது ஒரு குழந்தையின் முகம் வந்து போகும், அது வேறு யாரும் இல்லை சீரியல் நடிகை சஹானா தான்.

behindtalkies AMP · Quick view
View full