'சொல்ல வேண்டியத சொல்லிவிட்டேன் இதுக்கு மேல்..'என்று நவீன்-கண்மணி குறித்து கொந்தளித்து போன பிந்து
சில வாரமாவே சோசியல் மீடியா முழுவதும் கண்மணி- நவீன் காதல் குறித்த கருத்து தான் அதிகமாக சென்று கொண்டு இருக்கிறது. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் சீரியல் இதயத்தை திருடாதே. இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் நவீன் - பிந்து. நடிகர் நவீன் சின்னத்திரை வருவதற்கு முன்பே வெள்ளித்திரையில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலாக மலையாளத்தில் Money Ratnam என்ற படம் மூலம் தான் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன் பின் தமிழில் மசாலா படம், பூலோகம், பின் மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவர் சின்னத்திரையில் அறிமுகமானார்.
தற்போது இவர் நடித்து வரும் இதயத்தை திருடாதே சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டாப் ரேட்டிங்கில் ஒன்றாக இதயத்தை திருடாதே உள்ளது. இந்த சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீனும், சகானா என்ற கதாபாத்திரத்தில் ஹிமா பிந்துவும் நடித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த தொடரின் மூலம் இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூக வலைதளப் பக்கங்களில் இந்த ஜோடி குறித்த கருத்துக்கள் தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
நவீன்-கண்மணி திருமணம்:
மேலும், இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், நவீனும்- பிந்துவும் நாங்கள் நண்பர்கள் தான் என்று கூறிவிட்டார்கள். இந்த நிலையில் சமீபத்தில் நவீனுக்கும் சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் திருமணம் ஆக போகிறது என்ற தகவல் வெளியானது. இது இதயத்தை திருடாதே ரசிகர்களுக்கு செம்ம ஷாக்கிங்காக இருந்தது. மேலும், இவர்களது காதல் திருமணம் இல்லை என்றும், பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. நவீன் குடும்பமும், கண்மணி குடும்பமும் நீண்ட கால நண்பர்களாம்.
நவீன்-கண்மணி புகைப்படம் விடியோக்கள்:
நிச்சயிக்கப்பட்ட பின் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக உறுதிப்படுத்தி இருக்கின்றன. அதோடு இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையுமே அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். இது தவிர நவீன், கண்மணிக்காக பாடிய காதல் பாடல் வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலானது. இதனால் கண்மணி- நவீன் ஜோடி குறித்து நிறைய பாசிட்டிவ், நெகட்டிவ் கமெண்ட்ஸ் எல்லாம் வந்தவண்ணம் இருக்கின்றன. ஏன்னா, சீரியலில் நவீன்-பிந்து ஜோடி அவ்வளவு அருமையாக இருந்ததால், நிஜத்திலும் இவர்கள் சேருவார்கள் என்று ரசிகர்கள் நினைத்தார்கள்.
நவீன்- கண்மணி திருமணம் குறித்த சர்ச்சை:
ஆனால், திடீரென்று நவீன் கண்மணியை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று தெரிந்ததில் இருந்து ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் நவீனை விமர்சித்து கமெண்டுகளை போட்டிருந்தார்கள். இதனால் நாவினுக்கு ஆதரவாகவும், பிந்துவுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சில தினங்களுக்கு முன்பு நவீன்- பிந்து இருவரும் சேர்ந்து பேட்டியளித்திருந்தார்கள். அதில் நவீன் கூறியிருப்பது, நாங்கள் சர்ச்சையை நல்லதாகவும் பார்க்கிறோம் கெட்டதாகவும் பார்க்கிறோம். இந்த சர்ச்சை குறித்து நாங்க ரெண்டு பெரும் வெளிப்படையாக பேசினால் சர்ச்சை இல்லாமல் போய்விடும். அதனால் தான் நாங்க ரெண்டு பேரும் பேசாமல் இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் நம்மைப்பற்றி பேசிட்டு இருப்பது நல்லா தானே இருக்கு என்று கூறினார். இவரை தொடர்ந்து பிந்து கூறியிருப்பது,
https://www.youtube.com/watch?v=qasR6_TYG4o
விளக்கம் கொடுத்த நவீன்-பிந்து:
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கற்பனை இருக்கும் நடக்கிறது. நடக்கட்டும் நாங்கள் ரெண்டு பேரும் யாருன்னு எங்களுக்கு தெரியும் என்று கூறியிருந்தார். உடனே நவீன், நீங்கள் முகத்தை இப்படி வைக்காதீங்க. பார்க்கிறவர்களுக்கு தப்பா தான் தெரியும் என்று கூறினார். இதனால் கோபத்துடன் பிந்து, இந்த கேள்வியை தயவுசெய்து அவாய்ட் பண்ணுங்க. நான் அதைப்பற்றி பேச விரும்பவில்லை. இதில் என்னை நுழைக்காதீர்கள். சீரியல், என்னை சம்பந்தப்பட்ட கேள்வி எதுவானாலும் கேளுங்கள். பதில் சொல்கிறேன். அதோடு சொல்ல வேண்டியதை நான் சொல்லிவிட்டேன். இதுக்குமேல் துருவித்துருவி கேட்டாலும் என்கிட்ட எந்த பதிலும் இல்லை என்று கோபமாக பிந்து பேசியிருந்தார். இப்படி நவீன் - பிந்து அளித்திருக்கும் பேட்டி வீடியோ சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.