உதவி இயக்குனரை ரத்தம் வர அளவு அடித்துள்ள நவீன், அவரால் ஏற்கனவே முதுகெலும்பு உடைந்ததாக ஷாக்கொடுத்த இதயத்தை திருடாதே சீரியல் நடிகை.

By Rajkumar · 24/8/2022

உதவி இயக்குனரை சீரியல் நடிகர் நவீன் கன்னத்தில் அறைந்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நவீன். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இவர் சின்னத்திரை வருவதற்கு முன்பே பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இவர் முதன் முதலாக மலையாளத்தில் Money Ratnam என்ற படம் மூலம் தான் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன் பின் தமிழில் மசாலா படம், பூலோகம், பட்டாஸ், மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவர் சின்னத்திரையில் அறிமுகமானார். மேலும், இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்து இருந்தது இதயத்தை திருடாதே சீரியல் தான். இந்த சீரியலின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் படை உருவாகி இருக்கிறது.

கண்மணி- நவீன் திருமணம்:

தற்போது நவீன் அவர்கள் கலர்ஸ் தமிழில் கண்ட நாள் முதல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அருண் ராஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கிய குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இந்த சீரியலின் சூட்டிங் சென்னை கிருஷ்ணா நகரில் நடந்து கொண்டிருக்கின்றது.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டு ஹீரோக்களில் ஒருவரான நவீன் சூட்டிங் வரவில்லை. இதனால் உதவி இயக்குனர் குலசேகரன் நவீன் உடைய அறைக்கு சென்று அழைத்திருக்கிறார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

கண்ட நாள் முதல் சீரியல்:

அதன் தொடர்ச்சியை உதவி இயக்குனர் குலசேகரன் கண்ணத்தில் நவீன் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் சூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. பின் குலசேகரனுக்கு கண்ணுக்கு கீழ் இரத்தம் வந்து இருக்கிறது. இதனை அடுத்து அவருக்கு முதலுதவி தந்ததாகவும் கூறப்படுகிறது.சின்னத்திரை இயக்குனர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் குலசேகரன், நவீன் மீது புகார் அளித்திருக்கிறார். மேலும், மதுரவாயல் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. போலீஸ் இரண்டு தரப்பு வாதங்களையும் விசாரித்து வருகிறது.

நவீன் மீது உதவி இயக்குனர் அளித்த புகார்:

இந்நிலையில் இது தொடர்பாக சீரியலில் நடித்த நடிகர்களிடம் கேட்டபோது, கொஞ்ச நாளாகவே இந்த சீரியலில் நவீனுக்கு நடிக்க ஆர்வம் இல்லாதவர் போல் இருக்கிறார். அவர் அடித்ததற்கான காரணம் என்னவென்று எங்களுக்கும் தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் நவீனுடன் இதயத்தை திருடாதே தொடரில் நடித்த நிலானி 'இதயத்தை திருடாதே சீரியலில் நான் நவீனுடன் வேலை செய்திருக்கிறேன். ஒருமுறை என்னை தள்ளிவிடுற மாதிரி காட்சியில் நிஜமாகவே என்னை தள்ளி என்னுடைய முதுகெலும்பு ப்ராக்சர் ஆகி இருக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார்'

சக நடிகையின் ஷாக்கிங் கமன்ட் :

அதே போல நவீன் அவரை அடித்தாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிஜமாகவே அவருக்கு கோபம் வரும். நடிப்பை கூட ஒரிஜினலா கோவப்பட்டு தான் நவீனுக்கு பண்ண தெரியும். ஒரு முறை அல்ல இரண்டு முறை இதுபோல சம்பவங்கள் நடந்து இருக்கிறது. ஒரு முறை குத்துவிளக்கு எடுத்து ஷாமை குத்துவது போல ஒரு சீனில் எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கை தூக்கி அதில் இருக்கிற என்னை என் மேலும் ஷாம் மேலும் கொட்டி நாங்கள் அனைவரும் சங்கடப்படும் அளவிற்கு ஆகிவிட்டது. ஆனால் நவீன் ஒரு சாரி கூட கேட்டது கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full