சிம்பொனி இசை நிகழ்ச்சி: ஆவேசத்தில் இளையராஜா சொன்னது, பதறிப்போய் லிடியன் நாதஸ்வரம் கொடுத்த விளக்கம்
இளையராஜா சிம்பொனி சர்ச்சை தொடர்பாக லிடியன் நாதஸ்வரம் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையதத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசை துவங்கி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இளையராஜா லண்டன் மாநகரில் புதிய சிம்பொனி இசை கோர்வையை இளையராஜா அவர்கள் அரங்கேற்றம் செய்து இருக்கிறார். சிம்பொனி என்பது மேற்கத்திய இசை வடிவம். இதை வெறும் 34 நாட்களில் இளையராஜா உருவாக்கி இருக்கிறார். இது இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகும். இதன் மூலம் தமிழர்களின் பெருமை உலகெங்கும் பரவி இருக்கிறது. இதற்காக இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின், கமலஹாசன், திருமாவளவன், ரஜினி, சிவகார்த்திகேயன், பாஜக தலைவர்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
இளையராஜா சிம்பொனி:
பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் இளையராஜா, தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அப்போலோ அரங்கில் சிம்பொனியை அரங்கேற்றுகிறேன். நம் பெருமையை பறைசாற்ற லண்டன் செல்கிறேன். இது என்னுடைய பெருமை கிடையாது. நம்முடைய பெருமை, தமிழ்நாட்டின் பெருமை, இந்தியாவின் பெருமை. நீங்கள் எல்லாம் சேர்ந்தது தான் நான். இன்கிரிடபில் இந்தியா போல் நான் இன்கிரெடிபில் இளையராஜா என்று கூறி இருந்தார். இதை அடுத்து லண்டனில் சிறப்பாக சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு இளையராஜா சென்னைக்கு திரும்பி இருந்தார்.
சிம்பொனி சர்ச்சை:
இதற்கிடையில் இளம் இசை அமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் என்பவர் தான் இளையராஜாவுக்கு சிம்பொனி எழுத உதவினார் என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக இளையராஜாவை விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர், லிடியன் நாதஸ்வரம் என்னுடைய மாணவன் தான். அவன் இசையை என்னிடம் தான் கற்று வருகிறேன். ஒருமுறை அவன் சிம்பொனி ஒன்றை இசை அமைகிறேன் என்று என்னிடம் வந்து ஒரு இசை அமைத்துக் காட்டினான். அதைக் கேட்ட நான் சில நிமிடத்திலேயே நிறுத்த சொல்லிவிட்டேன். இது சிம்பொனி மாதிரி இல்லை.
இளையராஜா பேட்டி:
சினிமா பிஜிஎம் மாதிரி இருக்கிறது. சிம்பொனி இசை என்றால் என்னவென்று தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு இசையமை என்று அவனுக்கு அறிவுரை சொன்னேன். மற்றபடி சிம்பொனி இசையை யாரையும் வைத்து நான் எழுதவில்லை. இத்தனை வருடங்களாக நான் இசைத்துறையில் சொந்த காலில் நடப்பவன். யாருடைய உதவியையும் நான் பயன்படுத்தியது கிடையாது. சொந்தக்கால் என்றால் செருப்பு கூட இல்லாமல் நான் வெறும் காலில் நின்று வளர்ந்தவன். நான் கச்சேரிகளுக்கு வாசித்து, நாடகங்களுக்கு வாசித்து, உதவியாளராக சினிமாவில் இருந்து படிப்படியாக வளர்ந்தவன் என்று கூறியிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=IT7cpaHvFhw
லிடியன் நாதஸ்வரம் பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் லிடியன் நாதஸ்வரம், இளையராஜா அங்கிள் என்னுடைய குரு. அவர் சொன்னது எல்லாமே உண்மை தான். சிம்பொனி பற்றி அவரிடம் நான் நிறைய பேசி இருக்கிறேன்.
அப்போது அவர், நீயும் கற்றுக்கொண்டு முறையாக சிம்பொனி இசையை அரங்கேற்றி நிறைய விருதுகளை பெற்று பெருமை சேர் என்று சொன்னார். அவர் எப்போதுமே ஆனஸ்ட் ஆனவர். மனதில் எதையும் வைத்துக்கொண்டு பேசமாட்டார். வெளியில் அப்படி தெரிந்தாலுமே அவர் உண்மையில் அப்படி கிடையாது என்று கூறியிருக்கிறார்.