தேவையில்லாம தேவா பத்தி என்னிடம் பேசாதீங்க - காப்புரிமை விவகாரத்தால் கொந்தளித்த இளையராஜா

By subhashini · 7/3/2025

காப்புரிமை தொடர்பாக இசையமைப்பாளர் தேவா குறித்த கேள்விக்கு ஆவேசமாக இளையராஜா அளித்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசை பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி இருக்கும் நிலையில் இளையராஜா லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்த இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. லண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில் வருகிற எட்டாம் தேதி அன்று புதிய சிம்பொனி இசை கோர்வையை இளையராஜா அவர்கள் அரங்கேற்றம் செய்ய இருக்கிறார். சிம்பொனி என்பது மேற்கத்திய இசை வடிவம். இதை வெறும் 34 நாட்களில் உருவாக்கி இருக்கிறார்.

சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி:

இது இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகும்.
இதன் மூலம் தமிழர்களின் பெருமை உலகெங்கும் பரவ இருக்கிறது. இதற்காக இளையராஜாவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், கமலஹாசன், திருமாவளவன், சிவகார்த்திகேயன், பாஜக தலைவர்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், நேற்று காலையில் இளையராஜா அவர்கள் லண்டனுக்கு செல்ல இருந்தார். இதனால் சென்னை விமான நிலையத்தில் அவருக்கு வாழ்த்து சொல்லி வழி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இளையராஜா பேட்டி:

அப்போது செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அப்போலோ அரங்கில் சிம்பொனியை அரங்கேற்றுகிறேன். நம் பெருமையை பறைசாற்ற லண்டன் செல்கிறேன். இது என்னுடைய பெருமை கிடையாது. நம்முடைய பெருமை, நம் தமிழ்நாட்டின் பெருமை, இந்தியாவின் பெருமை. நீங்கள் எல்லாம் சேர்ந்தது தான் நான். இன்கிரிடபில் இந்தியா போல் நான் இன்கிரெடிபில் இளையராஜா. என்னைப் போல ஒருவர் இதுக்கு மேல யாரும் வரப்போவதுமில்லை, வந்ததும் இல்லை. நான் என் வேலையில் கவனமாக இருக்கிறேன். நீங்கள் உங்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

View this post on Instagram

A post shared by TamilGlitz News (@tamilglitznews)

ஆவேசத்தில் இளையராஜா சொன்னது:

உடனே செய்தியாளர் ஒருவர், காப்புரிமை விவகாரத்தில் தேவா, யாரிடமும் பணம் வாங்க போவதில்லை என்னுடைய பாடலை எல்லோருமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அதற்கு உங்களுடைய கருத்து என்று கேட்டிருக்கிறார்கள். இதனால் டென்ஷனான இளையராஜா, இப்போ இந்த கேள்வி தேவையா? இது அனாவசியமானது. இதுபோன்ற கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். இங்க நான் பேசணுமா? இல்லை நீங்க பேசணுமான்னு முடிவு பண்ணிக்கோங்க என்று கோவமாக பேசி இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/shorts/jfLDnw4kD80

தேவா அளித்த பேட்டி:

ஏற்கனவே அளித்த பேட்டியில் தேவா, என்னுடைய பாடலுக்கு நான் காப்புரிமை வாங்கப் போவதில்லை. லியோ படத்தில் கூட என்னுடைய பாடலை பயன்படுத்தியிருந்தார்கள். அந்த பாடல் எல்லோர் மத்தியில் பிரபலமாக இருப்பதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. காப்பரிமை வாங்கினால் பணம்தான் கிடைக்கும். ஆனால், 2k மத்தியில் பிரபலமும் புகழும் கிடைக்காது. எனக்கு பணம் முக்கியமா? புகழ் முக்கியமா? என்றால் புகழ் தான் வேண்டும். எல்லோரும் என்னுடைய பாடலை பாடினால் எனக்கு சந்தோசம் பெருமை தான் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full