உன்ன ஹீரோ ஆக்குனதே வெற்றிமாறன் தான் - சூரியை அருகில் அழைத்து ராஜா செய்த செயல்

By ·

விடுதலை 2 படத்தின் விழாவில் சூரி குறித்து இளையராஜா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் விடுதலை.

இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போராளியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார்.

விடுதலை படம்:

இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தை குறித்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் பாராட்டி இருந்தார்கள். விடுதலை படத்தின் முதல் பாகம் வெற்றி அடைந்ததை அடுத்து இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இரண்டாம் பாகத்தைக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=TijuR7kEIzM

விடுதலை 2 படம்:

இந்த இரண்டாம் பாகத்திலும் இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார். முதல் பாகத்தில் வந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்களை கவர்ந்து இருந்தது. .தற்போது இரண்டாம் பாகத்தில் தினந்தினமும் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்நிலையில் இன்று சென்னையில் விடுதலை 2 படத்தினுடைய இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. இதில் படக் குழுவினருடன் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள்.

இளையராஜா கேட்ட கேள்வி:

அப்போது விழாவில் இளையராஜா, உன் பெயரை சொன்னவுடன் யாரும் ஏன் கைதட்டவில்லை என்று சூரியை கேட்கிறார். அதற்கு சூரி, எல்லோருமே என்னுடைய அண்ணன், தம்பிகள் தான். நீங்கள் பேசுகிறீர்கள். அதை தடை செய்ய வேண்டாம் என்றுதான் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார். அதற்குப் பின் இளையராஜா, நீ எத்தனை படத்தில் கதாநாயகனாக நடிக்கிறாய்? என்று கேட்டதற்கு, இரண்டு படத்தில் கதை நாயகனாக நடிக்கிறேன் என்று சூரி சொல்கிறார்.

https://youtube.com/shorts/c4zQUTr9YXI?si=yWtrda20woE3EQHj

சூரி கொடுத்த பதில்:

உடனே இளையராஜா, உன்னை கதாநாயகன் ஆக்குனதே வெற்றிமாறன் தான். நீ காமெடியனாக தானே நடித்தாய். கதாநாயகனாக நடிக்கிறது காமெடியா? இல்ல கதாநாயகனா? என்று கேட்கிறார். சூரியால் பதில் சொல்லவே முடியவில்லை திணறுகிறார். உடனே இளையராஜா, நான் சும்மா விளையாட்டுக்காக சொன்னேன் என்றார். அதற்கு சூரி, இதுவும் ஒரு முக்கியமான பதிப்பு தான் சார் என்று செல்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full