தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இளையராஜாவின் உண்மையான இயற்பெயர் ராசய்யா. இவர் 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப் படத்தில் இசை அமைத்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இவர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் இசையமைத்து உள்ளார். இவருடைய இசை திறமைக்கு பல விருதுகளை வாங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இளையராஜா அவர்கள் நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றும், முறையாக பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது இளையராஜா தான். அவருடைய இசைக்கு மயங்காத உயிர்களே ஏதாவது இருக்கா? அந்த அளவிற்கு இசை புலமை கொண்டவர். அந்த காலத்தில் இருந்து தற்போது வரை இளையராஜாவின் இசைக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் சினிமா உலகில் இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் என பல முகங்களைக் கொண்டவர். பின் இளையராஜா அவர்கள் ஜீவா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இவர்கள் மூவருமே தன் தந்தையைப் போல இசையில் புலமை பெற்று வருகிறார்கள். இளையராஜாவின் குடும்பமே இசை குடும்பம் தான்.

இதையும் பாருங்க : செப்டம்பர் வந்தா எனக்கு இத்தனை வயசுன்னா நம்புவீங்களா. குஷ்பு சொன்ன ரகசியம். வியந்த ரசிகர்கள்.

Advertisement

இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் இசையில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா. மேலும், யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை ஏற்று தனது பெயரை அப்துல் காலிக் என்று பெயரை மாற்றிக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா அவர்கள் தன்னுடைய அப்பாவிடமே இசை பணியை தொடர்ந்து செய்து வருகிறார். மகள் பவதாரணி அவர்கள் மைடியர் குட்டி சாத்தான் என்ற படத்தின் மூலம் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவதாரணி. இவர் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார்.

ஆனால் இவர் இசை அமைத்த படங்கள் எல்லாம் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால் தற்போது ஒரு அதிரடியான முடிவை எடுத்து உள்ளார். இதற்கு காரணம் இவர் இசையமைத்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்ததற்கு தன்னுடைய பெயர் தான் என்று எண்ணினார் பவதாரணி. தற்போது இவர் பெயரை “ராஜா பவதாரணி” என்று அதிரடியாக மாற்றிக் கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது பவதாரணி அவர்கள் சினிமா உலகில் பாடத் தொடங்கி விட்டார். தற்போது இவர் மாயநதி என்ற படத்தில் பாடுகிறார். இந்த படத்தில் இவருடைய பெயரை ராஜ பவதாரணி என்றும் கூறப்படுகிறது.

Advertisement
Advertisement