தமிழன் உணர்வு என்று சொல்லாதீர்கள், நல்ல விசயத்திற்கு போகிறேன் - செய்தியாளர்களிடம் ஆவேசப்பட்ட இளையராஜா
லண்டனில் நடக்கும் சிம்பொனி இசை நிகழ்ச்சி தொடர்பாக இளையராஜா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசை பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி இருக்கும் நிலையில் இளையராஜா லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்த இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. லண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில் வருகிற எட்டாம் தேதி அன்று புதிய சிம்பொனி இசை கோர்வையை இளையராஜா அவர்கள் அரங்கேற்றம் செய்ய இருக்கிறார். சிம்பொனி என்பது மேற்கத்திய இசை வடிவம். இதை வெறும் 34 நாட்களில் உருவாக்கி இருக்கிறார். இது இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகும்.
லண்டன் சிம்பொனி இசை:
இதன் மூலம் தமிழர்களின் பெருமை உலகெங்கும் பரவ இருக்கிறது. இதற்காக இளையராஜாவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், கமலஹாசன், திருமாவளவன், சிவகார்த்திகேயன், பாஜக தலைவர்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், இன்று காலையில் இளையராஜா அவர்கள் லண்டனுக்கு செல்ல இருக்கிறார். இதனால் சென்னை விமான நிலையத்தில் அவருக்கு வாழ்த்து சொல்லி வழி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, சிம்பொனி இசை ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்.
இளையராஜா பேட்டி:
தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அப்போலோ அரங்கில் சிம்பொனியை அரங்கேற்றுகிறேன். நம் பெருமையை பறைசாற்ற லண்டன் செல்கிறேன். தமிழனாக இது எப்படி இருக்கு? என்று கேட்கிறீர்கள். முதலில் மனிதனாய் எப்படி இருக்கு என்று கேளுங்கள். தேவையில்லாத கேள்வி கேட்காதீர்கள். நல்ல நிகழ்ச்சிக்காக சென்று கொண்டு இருக்கிறேன். நல்ல மனதோடு என்னை வாழ்த்துங்கள். இது என்னுடைய பெருமை கிடையாது. நம்முடைய பெருமை, நம் தமிழ்நாட்டின் பெருமை, இந்தியாவின் பெருமை.
https://www.youtube.com/watch?v=gdrEhOdXs4k
இசைப்பயணம் பற்றி சொன்னது:
நீங்கள் எல்லாம் சேர்ந்தது தான் நான். இன்கிரிடபில் இந்தியா போல் நான் இன்கிரெடிபில் இளையராஜா. என்னைப் போல ஒருவர் இதுக்கு மேல யாரும் வரப்போவதுமில்லை, வந்ததும் இல்லை. நான் என் வேலையில் கவனமாக இருக்கிறேன். நீங்கள் உங்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். இறைவனுடைய அருள் நாம் எல்லோருக்குமே பரிபூரணமாக இருக்க வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார். தற்போது இளையராஜாவின் இந்த இசை பயணத்திற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இளையராஜா இசைப்பயணம்:
மேலும், இவர் 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இதுவரை இவர் 7000க்கும் அதிகமான பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். அதேபோல் 20000க்கும் அதிகமான இசை கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். சமீபத்தில் இளையராஜாவின் 50 ஆண்டு திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றிருந்தது.