சன் டிவி இலக்கியா சீரியலில் விலகிய முக்கிய நடிகர் - அவருக்கு பதில் யார் தெரியுமா ? காரணம் இது தான்

By subhashini · 24/7/2023

சன் டிவியின் இலக்கியா சீரியலில் இருந்து முக்கிய நடிகர் விலகி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கதைகளத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

குறிப்பாக, தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலை பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனாலே சன் டிவி பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முக்கியமான சீரியலில் ஒன்று இலக்கியா. இந்த சீரியலில் கதாநாயகியாக ஹீமா பிந்து நடிக்கிறார்.

இலக்கியா சீரியல்:

இவர் ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இதயத்தை திருடாதே என்ற தொடரில் கதாநாயகியாக சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர். அதன் பின் இவர் இலக்கியா சீரியலில் நடிக்கிறார். இவரை அடுத்து சீரியலில் கதாநாயகனாக நந்தன் லோகநாதன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி 2 என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களைத் தொடர்ந்து இந்த சீரியலில் ரூபா ஸ்ரீ, மீனா வேமுறி, சுஷ்மா நாயர், ஜெய் ஸ்ரீனிவாசா, காயத்ரி ப்ரியா உட்பட பலர் நடிக்கிறார்கள்.

இலக்கியா சீரியல் நடிகர்கள்:

மேலும், இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அதோடு ஹீமா- நந்தன் ஆகிய இருவருக்காகவுமே இந்த சீரியலை பார்க்கிற ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த சீரியலில் இருந்து வில்லி மற்றும் கதாநாயகனின் அம்மா ரோலில் நடித்து இருந்தவர்கள் மாற்றம் செய்து இருந்தார்கள். இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து மீண்டும் பிரபல நடிகர் விலகி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீரியலில் விலகிய முக்கிய நடிகர்:

அதாவது இந்த சீரியலில் கதாநாயகன் நந்தன் தம்பியாக கார்த்திக் ரோலில் நடித்து வருபவர் ஜெய் ஸ்ரீனிவாசா. தற்போது இவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இவர் வேறு ஒரு தொடரில் நடிக்க இருப்பதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் மீனா என்ற சீரியலில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அதனால் தான் இவர் இலக்கியா சீரியலில் இருந்து விலகி விட்டார் என்று கூறப்படுகிறது.

ஜெய் பதிவிட்ட பதிவு:

மேலும், இது தொடர்பாக ஜெய் அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர்,
அனைவருக்கும் வணக்கம். நான் இலக்கிய சீரியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுகிறேன் என்று உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இலக்கியா சீரியலில் கார்த்திக் கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. ஹீமா பிந்து, நந்தன் லோகநாதனை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன் என்று கூறி இருக்கிறார். இனி இந்த தொடரில் ஜெய் ஸ்ரீனிவாசா நடித்த கதாபாத்திரத்தில் சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் அரவிஷ் நடிக்க இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full