300 ரூபா சம்பளத்துக்காக அன்னிக்கி பண்ணதோட பாதிப்பு தான் இது- கண்கலங்கிய நடிகர் இளவரசு

By subhashini · 19/9/2025

நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கான காரணம் குறித்து நடிகர் இளவரசு அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர். அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

மேலும், டிவி மூலம் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து வந்தார். இதற்கிடையிலே நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் அவஸ்தை பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். அது மட்டுமில்லாமல் இவர் குடிக்கு அடிமையாகி இருந்ததாகவும் கூறப்பட்டது.

ரோபோ சங்கர் உடல்நிலை:

இதனால் இவருடைய உடல்நலம் ரொம்பவே பாதிக்கப்பட்டு மெலிந்து போயிருந்தார். பின் இவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்து பழைய நிலைமைக்கு மாறி சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் ரோபோ சங்கர் சென்னையில் சினிமா சூட்டிங் ஒன்றில் கலந்துகொண்டு நடித்து இருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு நீர் சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்திருந்தார். இதனால் பதறிப் போன பட குழுவினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=ItTXW7pmhnc

ரோபோ சங்கர் மறைவு:

மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருந்தார்கள். மேலும், நேற்று திடீரென்று இவரை icuவில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளித்து வந்திருந்தார்கள். இருந்துமே சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ரோபோ சங்கர் உயிரிழந்திருக்கிறார். இவருடைய இழப்பு பலருக்குமே பேரதிர்ச்சியாக இருக்கிறது.
இவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ரோபோ சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி செய்தியாளர்களை சந்தித்த நடிகர் இளவரசு, என்னுடைய நெருங்கிய நண்பர் ரோபோ சங்கர்.

https://www.youtube.com/watch?v=3ZTRSVUH3Oc

இளவரசு பேட்டி:

சினிமா பிரபலங்கள் யாராவது இறந்தால் அதற்குக் காரணம் மதுதான் என்று சொல்வார்கள். ஆனால், ரோபோ சங்கர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ரோபோவாக நடித்தபோது அவருடைய உடல் முழுவதும் சில்வர் பெயிண்ட் பூசி கொள்வார். மேடையில் பெர்பார்ம் செய்வதற்காக தான் இவர் உடல் முழுவதும் சில்வர் பெயிண்டை பூசிக்கொண்டு இருந்தார். அதற்கு பிறகு அந்த சில்வர் பெயிண்டிங் நீக்குவதற்கு உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி அகற்றுவார்.

https://www.youtube.com/shorts/W09V60VYeWY

மறைவுக்கு காரணம்:

அதை அவர் தொடர்ச்சியாக பெயிண்ட் மற்றும் மண்ணெண்ணெய் அவருடைய உடலில் பட்டது தான் அவருடைய தோல் வலிமை இழந்துவிட்டது. இதில் ஏற்பட்ட குறைபாடுகளால் தான் அவருக்கு மஞ்சகாமலையும் வந்தது. இளம் வயதிலேயே இந்த பாதிப்பு அவருக்கு ஏற்பட்டுவிட்டது. வயது அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்ப உடலை பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால், உடலை பற்றி கவலைப்படாததால் தான் இன்று இந்த விபரீதம் நடந்திருக்கிறது. இதுபோன்ற கெமிக்கல்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். 46 வயது என்பது மரணத்திற்கான வயதே கிடையாது என்று கவலையில் கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full