இப்படியெல்லாம் பண்ணாத,மைக்க கொடுத்துட்டு போயிட்டே இருப்பேன் - மேடையில் டென்ஷானான இளையராஜா.
ரசிகர்கள் செய்த செயலால் விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா டென்ஷன் ஆகி கோபப்பட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆரம்பத்தில் இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதற்கு பின் தான் வெற்றி மாறன் இயக்குனராக சினிமா உலகில் களம் இறங்கினார்.
https://www.youtube.com/watch?v=GYeSfq_bj_M
இவர் முதன் முதலாக பொல்லாதவன் என்ற படத்தை தான் இயக்கி இருந்தார். அதன் பிறகு பெரும்பாலும் வெற்றிமாறன்– தனுஷ் காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் எல்லாமே தாறுமாறு. இறுதியாக தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்று இருந்தது. இந்த படத்திற்க்காக தனுஷும், வெற்றிமாறனும் தேசிய விருது வாங்கி இருந்தார்கள். தற்போது வெற்றிமாறன் அவர்கள் நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
விடுதலை படம்:
இந்த படத்தின் மூலம் தான் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் காடுகளில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். மேலும், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து விடுதலை படம் உருவாகிறது. அதோடு இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=M9g7QzqcJ7Y
படம் குறித்த தகவல்:
தற்போது முதல் பாகத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் குமரேசன் என்ற பெயரில் போலீஸ் கான்ஸ்டபிளாக சூரி, வாத்தியார் பெருமாள் என்ற போராளியாக விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் படத்தில் பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், ராஜூமேனன், இளவரசு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். மக்கள் படை தலைவராகவும், போராளியாகவும் இருக்கிற விஜய் சேதுபதியை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கும் போலீஸ் ஆபரேஷன் தான் படத்தின் கதை.
இசை வெளியீட்டு விழா:
மேலும், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. ட்ரைலர் வெளியானது அடுத்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா மேடையிலேயே கோபப்பட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள்.
கோபப்பட இசையமைப்பாளர்:
அப்போது நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். அதில் அவர், வெற்றிமாறனின் ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு அலைகளைக் கொண்டது. தமிழ் சினிமாவிற்கு வெற்றிமாறன் மிக முக்கியமான இயக்குனர். இதை நான் 1500 படங்களை முடித்த பின்னர் சொல்கிறேன். இப்படி இளையராஜா பேசிக் கொண்டிருக்கும்போதே ரசிகர்கள் கத்திக்கொண்டு ஆரவாரம் செய்தனர். இதனால் டென்ஷன் ஆகி கோபப்பட்டு இளையராஜா, மைக்கை கொடுத்துவிட்டு சென்று விடுவேன் என்று கோபமாக பேசி இருக்கிறார். பின் ரசிகர்கள் கூச்சல் சத்தம் நிண்ட பின்னர் தான் இவர் பேசியிருக்கிறார்.