கைவிடப்பட்டதா இளையராஜாவின் பயோபிக் படம்? தீயாய் பரவும் தகவல் - முழு விவரம் இதோ

By subhashini · 11/12/2024

இளையராஜா பயோபிக் படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல இருக்கிறது.

மேலும், இளையராஜாவின் 50 ஆண்டு திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றிருந்தது. இதில் பாடகர்கள் பலர் பாடல்களை பாடி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் எவர் கீரின் பாடல்களும் பாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜா, கிளாஸ் எடுக்கிறேன் என்று நினைக்காதீர்கள். என்னுடைய பயோபிக் எடுக்கிறார்கள். தனுஷிடம் இந்த பாடல்கள் உருவான கதை பற்றி எல்லாம் சொல்லி இருக்கிறேன். ஆனால், அது படத்தில் வருமா? என்று தெரியவில்லை.

இளையராஜா சினிமா பயணம்:

அதான் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். உங்களுக்காக தானே, நான் மனதில் வைத்துக்கொண்டு என்ன பண்ணப் போகிறேன். எனக்குள் இருக்கிற விஷயம் உங்களுக்கு தெரிந்தால் தான் சந்தோஷம். நீங்கள் சந்தோஷப்பட்டு பார்த்தால் தான் எனக்கு சந்தோஷம் என்று கூறி இருந்தார். இப்படி இளையராஜாவின் பயோபிக் படம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டு தகவல் வெளியாகி இருந்தது. இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். காரணம், தனுஷின் முகம் இளையராஜா முகம் போலவே இருப்பதாக கூறப்படுகிறது.

இளையராஜாவின் பயோபிக் படம்:

அது மட்டும் இல்லாமல் தனுஷ், இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் பயோபிக்கில் நடிக்க தனுஷ் சரியாக இருப்பார். இந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தான் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும் உற்சாகமும் ஏற்பட்டு இருக்கிறது. அந்த காலகட்டத்தில் இளையராஜாவுடன் நட்பாக பழகிய இயக்குனர்கள், பாடகர்கள் என பல பேர் இந்த படத்தில் வருவார்களா? கமலஹாசன், ரஜினி, வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம்பெருமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

படம் குறித்த தகவல்:

கமல்ஹாசன் திரைக்கதையில் இளையராஜா பயோபிக் படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், கனெக்ட் மீடியா, பிகே புரொடக்‌ஷன்ஸ், மெர்குரி மூவீஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இளையராஜாவும் இந்தப் படத்தை தயாரிப்பதாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கான இசையை இளையராஜா இசைகளில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சில மாதங்களுக்கு முன்புதான் இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில் சென்னை சென்ட்ரல் அருகில் இளையராஜா ஹார்மோனி பெட்டியுடன் நிற்பது போன்ற புகைப்படம் இருந்தது.

படம் ட்ராப் :

அதற்குப் பிறகு இந்த படம் குறித்த எந்த அறிவுப்புமே வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இளையராஜாவின் பயோபிக் படம் கைவிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த படத்தினுடைய திரைக்கதை பொறுப்பில் இருந்து கமலஹாசன் விலகிவிட்டார் என்றும், பட்ஜெட் அதிகமான காரணமாக தயாரிப்பு நிறுவனம் விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு தனுஷ் தற்போது குபேரா படத்தில் நடிக்கிறார். இதை அடுத்து இவர் இன்னும் சில படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இதனால் இளையராஜா பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்க மறுத்து இருப்பதாக கூறப்டுகிறது. அதோடு இயக்குனர், இளையராஜாவுடன் பிரச்சினை என பல காரணங்களால் தான் இந்த படம் டிராப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து படக்குழு தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலுமே வெளியாகவில்லை.

behindtalkies AMP · Quick view
View full