மனோபாலாவின் இறப்பு குறித்து இளையராஜா வெளியிட்ட இரங்கல் வீடியோவை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழ்சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்து சென்றாலும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகின்றார்கள் அந்தவகையில் நடிகர் மனோபாலா ஒருவர். ஆரம்ப காலத்தில் பாரதிராஜாவிற்கு துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா. மேலும், இவரை சிபாரிசு செய்தது வேறு யாரும் இல்லை நம் உலகநாயகன் கமலஹாசன் தான்.

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா.அதன் பின்னர் பல்வேறு படங்களை இயக்கினார் மணவாளா இறுதியாக ஜெயராம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நைனா படத்தை இயக்கியிருந்தார். மேலும், சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை ,சதுரங்க வேட்டை 2 போன்ற பல்வேறு படங்களை தயாரித்திருக்கிறார் மனோபாலா.

Advertisement

உடல்நலக் குறைவு :

அதுமட்டுமல்லாது சன் டிவியில் ஒளிபரப்பான புன்னகை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 7 7 போன்ற சின்னத்திரை தொடர்களையும் மனோபாலா இயக்கியிருக்கிறார்.இதுவரை 14 திரைப்படங்களை இயக்கிய மனோபாலா 19 சின்னத்திரை தொடர்களை இயக்கியுள்ளார். மேலும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் தான் உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள ஆப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ‘

திடீர் மாரணம் :

அவருக்கு அஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டாகவும் பின்னர் அவர் உடல் தேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் அவர் உடல்நலன் தேறி மீண்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த சில மாதங்களில் மனோ பாலா காலமாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்னை காரணமாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

Advertisement

இளையராஜா இரங்கல் :

மனோபாலாவின் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில் இளையராஜாவும் மனோ பாலாவின் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ‘என்னை பார்ப்பதற்காக நான் வீட்டிலிருந்து கிளம்பிய உடனே கோடம்பாக்கம் பக்கத்தில் காத்திருந்து பார்ப்பார். பின் நாட்களில் நடிகரானாலும், படங்களை இயக்கினாலும் என்னிடம் வந்து அப்போது அப்போது நடக்கும் விஷயங்களை சொல்லி விடுவார். ரெக்கார்டிங் நேரத்தில் சொல்லி என்னை மகிழ்விப்பார்’ என்றும் பேசி இருந்தார்.

Advertisement

விமர்சிக்கும் ரசிகர்கள் :

இளையரஜாவின் இந்த வீடியோவை கண்ட பலரும் இது இரங்கல் பதிவு போல தெரியவில்லை, உங்களின் பெருமையை சொல்லும் பதிவு போல தெரிகிறது என்று விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோவிற்கு கமண்ட் செய்துள்ள நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா ‘இசையில் ஞானி.. ஆனால் இங்கித்த்தில்’ என்று குறிப்பிட்டு தலையில் அடித்துக்கொள்ளும் எமோஜிக்களையும் இளையராஜாவை விமர்சித்து இருக்கிறார்.

Advertisement