ஒரு வாரத்தில் வனிதா பதில் சொல்லணும் - நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு , முழு விவரம் இதோ
வனிதா படத்தின் மீது இளையராஜா தொடர்ந்த வழக்கு குறித்து நீதிமன்றம் போட்ட உத்தரவு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தற்போது இவர் சினிமா, சீரியல், நிகழ்ச்சிகள், பிசினஸ் என்று பிசியாக இருக்கிறார்.
தற்போது இவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஹீரோயினாக நடித்திருக்கும் படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தை இவரே இயக்கி நடித்தும் இருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். வனிதாவின் மகள் ஜோவிகா தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், கிரண், ஆர்த்தி கணேஷ், கணேஷ், தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
மிஸஸ் அண்ட் மிஸ்டர்:
மேலும், சில தினங்களுக்கு முன் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையும் ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது. அதோடு இந்த படத்தில் சிவராத்திரி தூக்கம் ஏது என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடல் வெளியான போது இளையராஜாவுடன் வனிதா, ஜோவிகா இருவருமே சேர்ந்து எடுத்த ஒரு புகைப்படமும் வெளியிட்டு இருந்தார்கள். இந்த படம் வெளியானபோது இளையராஜா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இளையராஜா வழக்கு:
அதில், மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் சிவராத்திரி தூக்கம் ஏது என்ற பாடல் இடம் பெற்றது. இந்த பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும். என்னுடைய பாடலை இல்லாமல் இந்த பாடலை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று இளையராஜா கூறியிருந்தார். பின் இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில் வனிதா விஜயகுமார், இளையராஜா எனக்கு கடவுள் மாதிரி. அந்த கடவுளே கோபித்துக் கொண்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும். சம்பந்தப்பட்ட இசை நிறுவனத்திடம் இந்த பாடலுக்கான உரிமையை இசை இருக்கிறோம்.
https://www.youtube.com/watch?v=B_prxyStpVU
வனிதா பேட்டி:
அவர் வழக்கு தொடர்வதாக இருந்தால் அந்த நிறுவனத்தின் மீது தான் தொடர வேண்டும். சில விஷயங்களை இங்கு பேச முடியாது. உண்மையை சொன்னால் தப்பாகிவிடும். ஒரு பேட்டியில் இளையராஜா, என்னிடம் முறையாக அனுமதி வாங்கினால் காசு கூட கேட்காமல் நான் பாடலை பயன்படுத்த ஒத்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார். அதனால் நானும் என்னுடைய மகளும் அவருடைய வீட்டிற்கு சென்று அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி அதற்கு பிறகு தான் இந்த பாடலை வெளியிட்டோம். இருந்தும் அவர் ஏன் இப்படி செய்தார்? என்று தெரியவில்லை.
நீதிபதி உத்தரவு:
சின்ன வயதில் இருந்தே நான் அவருடைய வீட்டில் வளர்ந்து இருக்கிறேன். இளையராஜாவின் மனைவி வீட்டில் அம்மாவிடம் லாக்கர் சாவி வாங்கி அங்கிருந்த நகைகள் எல்லாம் எடுத்து அம்மனுக்கு பூஜை எல்லாம் செய்திருக்கிறேன்.சொல்லப்போனால் நான் அந்த வீட்டிற்கு மருமகளாக போக வேண்டியவள். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கண்ணீர் மல்க அழுது விட்டு சென்றிருந்தார். இந்நிலையில் இளையராஜா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்திருக்கிறது. விசாரித்த நீதிபதி, வனிதா விஜயகுமார் இன்னும் ஒரு வாரத்தில் இளையராஜா வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.