காதல் முறிவு, திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை - 8 மாத மகனின் புகைப்படத்தை பகிர்ந்த இலியானா

By subhashini · 6/4/2024

இலியானா மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து இருப்பவர்இலியானா. இவர் “இருக்கானா இடுப்பிருக்கானா” என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடலும் ஆவார். இவர் ‘தேவதாசு’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார்.

அதன் பின் இவர் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் நடித்து வந்தார். அதன் பின் 2012 ஆம் ஆண்டு பர்பி என்ற படத்தின் மூலம் இவர் இந்தி மொழியில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து ஹிந்தியில் பல படங்களில் நடித்தார். அதிலும், இவர் நடிப்பில் வெளிவந்த பர்பி, ஹாப்பி என்டிங், ருஷ்டம், ரைட் போன்ற படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இலியானா திரைப்பயணம்:

மேலும், இவர் கடைசியாக தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியாகியிருந்த அமர் அக்பர் அந்தோணி என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அது மட்டும் இல்லாமல் இவருக்கு தென்னிந்தியா மொழியிலும் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் ஹிந்தி மொழி படங்களில் மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு நடிகை இலியானா கர்ப்பமாக இருக்கும் செய்தி வெளியாகி இருந்தது.

இலியானா குழந்தை:

இவர் நடிகை கத்ரினா கைஃபின் சகோதரரை காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் தெரிவித்து இருந்தார். பின் இலியானா திருமணம் செய்யாமல் ஒரு ஆண் குழந்தைக்கு தாய் ஆனார். குழந்தை பிறந்த பிறகு தொடர்ந்து சோசியல் மீடியாவில் இலியானா கணவர் குறித்து பல சர்ச்சைகள் இருந்தது. இதனால் இலியானா தன்னுடைய கணவருடைய புகைப்படத்தை பதிவிட்டு, நான் சிங்கிள் இல்லை. பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர் தான் என்னுடைய கணவர் என்று கூறியிருந்தார்.

இலியானா திருமணம்:

அதோடு இவர்கள் திருமணம் கடந்த ஆண்டு மே மாதம் எளிமையாக நடந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார். அந்த வகையில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இலியானா சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், நான் செல்பி எடுத்து பல நாட்கள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். நான் முழு நேரமும் என்னுடைய குழந்தையை பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருக்கிறேன். இருந்தாலும் எனக்கான நேரம் கிடைக்கவில்லை. அதிக நேரம் நான் பைஜாமிலும், அள்ளி முடிந்த கொண்டையாக இருக்கிறேன்.

இலியானா மகனின் லேட்டஸ்ட் புகைப்படம்:

பல நாட்கள் நான் தூங்காமலும் இருக்கிறேன். குழந்தை பிறந்த பிறகு வரும் மன அழுத்தம் மிகப்பெரிய விஷயம் என்று கூறியிருந்தார். அதோடு இவர் தன்னுடைய குழந்தைக்கு கோயா பீனிக்ஸ் டாலன் என்ற பெயரை வைத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இலியானா தன்னுடைய குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில், நேரம் எப்படி போகுதுன்னு தெரியவில்லை. என்னுடைய குட்டி பெஸ்டிக்கு எட்டு மாதங்கள் நிறைவடைந்து விட்டது என்று கூறியிருக்கிறார். இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full