கேன்சர் சிகிச்சைக்கு வழியில்லாமல் கோயம்பேடு பஸ் ஸ்டான்டில் இருந்த நடிகர் - முகம் தெரியாத நபராகா உதவி செய்த இமான்.

By Rajkumar · 22/4/2023

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் நடித்திருந்தாலும் பலர் தற்போது எப்படி இருக்கிறார்கள் என்று கூட அவர்களுடன் நடித்தவர்களுக்கு தெரியவில்லை. அந்த அளவிற்கு கொரோனாவிற்கு பிறகு சினிமா துறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்படி கொரோனவினாலும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தற்போது சென்னை கோயம்பேடு தெருவில் வாழ்ந்து வரும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த நடிகர் தான் பிரபு இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவரை தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தின் பார்த்திருக்கலாம். அந்த படத்தில் தனுஷ் தங்கையை பெண் பாக்க வரும் மாப்பிள்ளையாக ஒரு சிறிய காட்சியில் வந்திருப்பார். ஆனால் தற்போது தெருவில் வசித்து வரும் நிலைமைக்கு உள்ளக்கிய அவர் பழனி என்ற சக நடிகரின் உதவியால் இல்லத்தில் சேர்ந்திருக்கிறார். இப்படி பட்ட நிலையில் தான் பிரபல ஊடகம் ஓன்று அவரை சமீபத்தில் பேட்டி எடுத்திருந்தது.

தனக்கு வாயில் புற்றுநோய் உள்ளதாகவ கூறிய அவர் தான் எப்படி இந்த நிலைமைக்கு வந்தேன் என்பதனை கூறினார். அவர் கூறியதாவது " எனக்கு புற்றுநோய் இருக்கிறது உதவி செய்யுங்கள் என்று சினிமா சங்கத்தில் கேட்பது சங்கடமாக இருந்தது. பின்னர் நன்பர் பழனி அவர்களை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எதிர்த்தமாக பார்த்தேன். அவர் என்னை பார்த்தவுடன் அடையாளம் தெரியவில்லை, நான் கடந்த காலங்களில் முற்றிலும் வேறுமாதிரியாக இருந்தேன். ஆனால் தற்போது இந்த நிலைமையில் இருப்பதினால் அவருக்கு அடையாளம் தெரியவில்லை. என் மீது அவருக்கு அக்கறை இருந்ததினால் என்னை இந்த இல்லத்தில் சேர்ந்தார் என தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=XGHFO4UW3L8&feature=youtu.be

மேலும் தனக்கு கடந்த 6 மாதங்களாக புற்றுநோய் இருப்பதாகவும் முதலில் சிறிய புண் போன்றுதான் இருந்தது. ஆனால் சில நாட்களில் பெரிதாகி கொண்டே சென்று அதிகமாக வாந்தி ஏற்பட ஆரம்பித்து. பின்னர் தான் மருத்துவரிடம் சென்று பார்க்கும் போது வாயில் புற்றுநோய் என கூறினார்கள். காப்பீடு திட்டத்திற்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு தேவை என்றார்கள். ஆதார் கார்டு இல்லை, காப்பீடு திட்டமும் இல்லாததினால் அப்பிரேஷன் செய்ய முடியவில்லை.

இந்த புற்றுநோய் எனக்கு புகையிலை பாக்கு போன்றவற்றை உபயோக படுத்தியத்தினால் வந்தது. எல்லாரும் பயன்படுத்துகின்றனர் என்று நானும் உபயோகித்தேன் ஆனால் அதுதான் இந்த புற்று நோய்க்கு காரணமாக ஆகிவிட்டது என கூறினார்.என்னுடைய தாய் தந்தை மறைந்து விட்டனர், எனக்கு 2 அண்ணன்கள் இருக்கின்றனர் ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, திருமணமும் ஆகவில்லை.

https://www.youtube.com/watch?v=qY9ewsS43cU&t=25s

பணம் எதுவும் இல்லை கடந்த 5 மாதமாக கோயம்பேட்டில் தான் இருந்து வருகிறேன். அம்மா உணவாதில் 3 வேலை தயிர் சாதம் போடுவார்கள் அதனை சாப்பிட்டு வருகிறேன் என்று கூறினார். இவரின் இந்த நிலையை கண்டு தனியார் மீடியா உதவி செய்ய முன் வந்தது. அதே போல இவரை காப்பகத்தில் சேர்த்து சிகிச்சைக்கும் உதவிய இமான் இதனை முகம் தெரியாத நபராக செய்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் பிரபுவை தனது மனைவியுடன் சென்று நேரில் சந்தித்து உதவிகளை செய்துவிட்டு ஆறுதலையும் கூறி இருக்கிறார் இமான்.

behindtalkies AMP · Quick view
View full