தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இசை அமைப்பாளராக திகழ்பவர் டி.இமான். இவர் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தமிழன் படத்தின் மூலம் தான் டி . இமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பு இவர் தில்ரூபா என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அதிலும் அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்தில் இவருடைய பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி இருந்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார். அதோடு கிராம கதையம்சம் கொண்ட கதைக்கு தான் இவர் அதிகம் இசை அமைத்து இருக்கிறார்.

Advertisement

இமான் செய்த உதவிகள்:

இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே இமான் அவர்கள் தன்னுடைய இசையில் பல மாற்றுத் திறனாளிகளுக்கு பாட வாய்ப்பளித்திருப்பது அனைவரும் அறிந்ததே. முதன் முதலில் இவர் மாற்றுத்திறனாளி திருமூர்த்திக்கு தான் வாய்ப்பு அளித்திருந்தார். அவரைத் தொடர்ந்து வைக்கோம் விஜயலட்சுமியை பாட வைத்தார். தற்போது இவர் மாற்றி திறனாளி சிறுமி சகானாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் இமானை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல சேனலுக்கு இமான் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் தன்னை விமர்சித்தவர்கள் குறித்து கூறியது, பொதுவாகவே நாம் தேடி சென்று மார்க்கெட் செய்து ஒரு படம் கிடைப்பது ஒரு ரகம். இன்னொன்று நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று ஒருவர் சொல்லி நமக்கு கிடைப்பது இன்னொரு ரகம். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பெரிய டீமை எதிர் பார்த்தால் அதற்கு சில விஷயங்களை நாம் செய்ய வேண்டி இருக்கும்.

Advertisement

இருந்தாலும் கடைசியாக அந்த இடத்தில் உங்கள் வேலை தான் பேசும். உங்களுடைய வேலை தான் உங்களுக்கான உண்மையான பி ஆர். நீங்கள் அடித்து பிடித்து ஒரு ப்ராஜெக்ட்டை வாங்கி பாடல்கள் கொடுக்க தாமதப்படுத்தினால் அந்த இயக்குனர் மீண்டும் உங்களை தேடி வர மாட்டார். அதுவே நீங்கள் இயக்குனர் சொன்ன வேலையெல்லாம் சரியாக செய்து படம் ஓடவில்லை என்றாலும் அந்தப் பையன் சரியாகத்தான் செய் தான். வேறு இடத்தில் தான் பிரச்சனை என்று சொல்வார்கள்.

Advertisement

ரசிகர்களுக்கு சொன்ன அறிவுரை:

என்றைக்குமே நடிகர்கள் எனக்கு பெரிய உற்சாகத்தை எல்லாம் கொடுத்தது கிடையாது. ஆனால், அந்த நடிகர் எப்படியாவது மியூசிக் செய்து கொடுக்க வேண்டும் என்று நான் நினைப்பேன். அது மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்று நான் என்றும் நினைத்ததில்லை. எனக்கு அமைந்தது எல்லாமே கடவுள் கொடுத்த பிச்சை. ஒரு படத்தை பார்த்தால் அதனை அப்படியே விட்டு விடுங்கள். அதனுடைய பாக்ஸ் ஆபிஸில் நம்பர் எல்லாம் உங்களுக்கு எதற்கு? அதுவா உங்கள் மாச இஎம்ஐ கட்டப் போகிறது? உங்களுக்கு அந்த ஹீரோ பிடிக்குமா? அந்த இசையமைப்பாளர் பிடிக்குமா? என்று யாரை வேண்டுமானாலும் கொண்டாடுங்கள். ஆனால், மொத்த நேரத்தையும், எனர்ஜியும் அதற்காக செலவிடாதீர்கள் என்று கூறியிருந்தார்.

Advertisement