இந்த சிறுமியின் விவரம் தேவை - இமான் தேடும் இந்த சிறுமி யார்? வைரலாகும் வீடியோவின் பின்னணி.

By subhashini · 25/11/2023

ஏழை சிறுமி பாடிய அப்பா பாடலைக் கேட்டு இசையமைப்பாளர் டி. இமான் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இசை அமைப்பாளராக திகழ்பவர் டி.இமான். இவர் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தமிழன் படத்தின் மூலம் தான் இமான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

ஆனால், இதற்கு முன்பு இவர் தில்ரூபா என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அதிலும், அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்தில் இவருடைய பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி இருந்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார்.

இமான் திரைப்பயணம்:

அதோடு கிராம கதையம்சம் கொண்ட கதைக்கு தான் இவர் அதிகம் இசை அமைத்து இருக்கிறார். தற்போது இவர் வள்ளி மயில், மலை போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீபகாலமாகவே இமான் அவர்கள் தன்னுடைய இசையில் பல மாற்றுத் திறனாளிகளுக்கு பாட வாய்ப்பளித்திருப்பது அனைவரும் அறிந்ததே. முதன் முதலில் இவர் மாற்றுத்திறனாளி திருமூர்த்திக்கு தான் வாய்ப்பு அளித்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=HxOZpiowQwI

இமான் செய்த உதவிகள்:

அவரைத் தொடர்ந்து வைக்கோம் விஜயலட்சுமியை பாட வைத்தார். சமீபத்தில் கூட இவர் மாற்றி திறனாளி சிறுமி சகானாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் இமானை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்கள். பின் நரிக்குறவர் குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் மதிப்பீட்டில் அப்பகுதியில் உள்ள ஆறு குடும்பங்களுக்கு குடிசை வீடுகள் சீரமைத்தும், மூன்று வீடுகளுக்கு தார்பாய்கள் மற்றும் சீரமைத்தும், இரவு நேர பாடசாலை அமைத்து நோட்டு புத்தகங்கள் வழங்கி இருக்கிறார்.

இதனை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவ யாரும் இல்லாமல் துணையில்லாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு இமான் பண உதவி செய்து ஆறுதலையும் கூறி இருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் கூட விபத்தில் மொத்த குடும்பத்தையும் இழந்த மாணவிக்கு இமான் உதவி செய்திருந்தார்.

இந்த நிலையில் ஏழை சிறுமி ஒருவருக்கு உதவி செய்ய இமான் செய்திருக்கும் கோரிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஏழை சிறுமி தன்னுடைய அப்பாவை குறித்து பாடல் ஒன்றை பாடுகிறார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதை பார்த்து இமான் அந்த சிறுமிக்கு உதவி செய்யும் நோக்கில் அவருடைய பெயர், அவருடைய தொடர்பு விபரம் குறித்து கேட்டிருக்கிறார். இதனை பார்த்த பலருமே சிறுமி குறித்து கேட்டும் இமானின் பதிவை வைரலாக்கியும் வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full