விவகாரத்து ஆகி ஒரு குழந்தை இருக்கும் பாலிவுட் நடிகருடன் ஊர் சுற்றும் சிம்பு பட நடிகை லேகா.

By Manikandan · 8/2/2023

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான இம்ரான் கான் தென்னிந்திய சினிமா நடிகையடன் ஒன்றாக சுற்றுவது த்ற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமானவராக இருந்துவரும் அமீர் கானின் சகோதரி மகன் தான் இம்ரான் கான். இவர் 1998ஆம் ஆண்டு வெளியான கயாமத் சே கயாமத் தக் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாக்கினார்.

பின்னர் 2008ஆம் ஆண்டு வெளியான "ஜானே தூ யா ஜானே நா" என்ற படத்தில் தான் கதாநாயகனாக தன்னை பாலிவுட் சினிமாவில் அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த இம்ரான் கானின் படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி வெற்றி படங்களை கொடுத்துக்கொண்டே இருக்கும் போதுதான் தான் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆமீர் கான் திருமண வாழ்க்கை :

நடிகர் இம்ரான் கான் நீண்டகாலம் காதலித்த அவந்திகாவை கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் 2019ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர். இவர்களை ஒன்று சேர்க்க பல முயற்சிகளை எடுத்தாலும் அவை அனைத்துமே தோல்வியில் முடிந்தது. மேலும் இந்த ஜோடிக்கும் இமாரா என்ற மகன் இருப்பது குறிப்பிடதக்கது. தற்போது அவந்திகா சாஹிப் சிங் என்ற நபருடன் பழகிவரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக நிலையில் இம்ரான் காணும் தமிழ் சினிமா நடிகையுடன் வெளியில் சுற்றுவதாக வீடியோ ஓன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கைகோர்த்தபடி வீடியோ :

தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே நடித்த லேகா வாஷிங்க்டனும் இம்ரான் காணும் காதலித்து வருவதாக ஷோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதனை இதுவரையில் இம்ரான் கான் ஒப்புக்கொள்ளவில்லை. இவர்கள் இருவரும் கைகோர்த்தபடி சுற்று வரும் புகைப்படங்களும் வீடியோ பதிவுகளும் சமீபத்தில் வெளியான நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வருவது உறுதியாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

லேகா வாஷிங்டன் :

தென்னித்திய நடிகையான லேகா வாஷிங்டன் தமிழ் சினிமாவில் உன்னாலே உன்னாலே, கல்யாண சமையல், ஜெயம் கொண்டான், அரிமா நம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். அதோடு தமிழ் மொழி மட்டுமில்லாமல் மற்ற பிற மொழிகளிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இசை ஆல்பங்களிலும் ஆடி இருக்கிறார். இந்நிலையில் இவர் நடிகர் சிம்புவின் கெட்டவன் என்ற படத்தில் லேகா நடிப்பதாக இருந்தார் ஆனால் அந்த படத்தின் தயாரிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

இதுவே தான் சினிமாவில் இருந்து விளக்குவதற்க்கான காரணம் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். லேகா வாஷிங்டன் மும்பையைச் சேர்ந்த பல்லோ கட்டர்ஜி என்பவரை நீண்ட நாள் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஆனால் அவ்ர்கள் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். இப்படிப்பட்ட நிலையில் தான் லேகா வாசிங்டன் தற்போது இம்ரான் கானுடன் வெளியில் சுற்றி வருகிறார் என்று தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full