சமீப காலமாக விஜய் படங்கள் என்றாலே பிரச்சனைகள் புக் செய்து வருகிறது. தலைவா படம் துவங்கி சமீபத்தில் வெளியான பிகில் படம் வரை பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தற்போது விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

Advertisement

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தினை XB நிறுவனம் சார்பில் தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் ஒன்று வெளியாகி இருந்தது. ஆனால், இந்த பாடல் குட்டி ஸ்டோரி பாடல் அளவிற்கு ரீச் ஆகவில்லை. இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் தற்போது வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். நேற்று மாலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே, விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரூ.300 கோடி லாபம் கிடைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னை தியாகராய நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏஜிஎஸ். நிறுவனம், நடிகா் விஜய்க்கு சொந்தமான பங்களாக்கள், பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமானவரித் துறையினா் திடீா் சோதனை செய்தனா்.

Advertisement

Advertisement

நடிகா் விஜயை அவரது பனையூா் பங்களாவுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் வருமானவரித் துறையினா் விசாரணை செய்தனா் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தின் இணை தயரிப்பாளர் வருமான வரி துறை சோதனையில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் மாஸ்டர் குழுவை கொஞ்சம் பீதியடைய செய்துள்ளது.

Advertisement