இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெடிண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன். கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது.

இதனை அடுத்து கமலின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் “இந்தியன்” என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து இருந்தார்கள் படக்குழு. 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வந்தது.

Advertisement

இந்தியன் 2 படம்:

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வெற்றிகரமாக படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. அப்போது கமலஹாசன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதே சமயம் சட்ட மன்ற தேர்தலில் கமல் பிசியாக இருந்ததால் அவர் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். சிறிய இடைவெளிக்கு ல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

படம் குறித்த தகவல்:

ஆனால், படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து இருந்தார்கள். அதில் 8 பேர் படுகாயமடைந்து இருந்தார்கள். இதனால் படப்பிடிப்பு நின்று விட்டது. இப்படி பல பிரச்சனைகளின் நடுவில் இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்கியது. மேலும், இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். தற்போது விவேக் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு ஜோக்கர் திரைப்படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் தான் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisement

இன்ட்ரோ வீடியோ :

தற்போது இந்தியன் 2வின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்தியன் 2 படம் மட்டும் இல்லாமல் இந்தியன் 3 படமும் உருவாகி வருவதாக தகவல் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில், கம்பேக் இந்தியன் என்ற பாடலோடு ஊழல்களை தட்டி கேட்க வீரசேகரன் சேனாதிபதி அறிமுகமாகி இருக்கும் காட்சி வந்திருக்கிறது. பின் மறைந்த நடிகர் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள். இதுதான் இவர்கள் மூவரின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

நெட்டிசன்கள் விமர்சனம்:

மேலும், இந்தியாவில் அதிகமாக பேசப்பட்ட ஊழல்கள், ஆதார், கொரோனா போன்றவை வைத்து தற்போது நடக்கும் அரசியலுக்கு ஏற்ப பேசப்பட்டிருக்கிறது. இந்த படம் இந்த ஆண்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியன் தாத்தா தற்போது இருக்கும் காலகட்டத்திற்கு எந்தெந்த அரசியல் பேசி யாருக்கெல்லாம் பாடம் எடுக்க போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்தியன் 1 படத்தில் சேனாதிபதியின் பிறந்த தேதி என்று 1918 என்ற வருடத்தை குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்தியன் தாத்தாவிற்கு தற்போது 105 வயது ஆகிவிட்டதா! என்றெல்லாம் நெட்டிசன்கள் என்றும் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement