சினிமாவைப்பொறுத்தவரை எத்தனையோ விளையாட்டு வீரர்கள் நடிகர்களாக களம் இறங்கியிருக்கிறார்கள் தமிழில் சடகோபன் ரமேஷ் ஹர்பஜன்சிங் இர்பான் பதான் போன்ற பலர் கிரிக்கெட்டுக்கு பின்னர் நடிகர்களாக வலம் இறங்கினார்கள். இப்படி ஒரு நிலையில் 90 காலகட்டத்திலேயே இந்திய அணியின் உலக கோப்பை அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் ஒருவர் தமிழ் படத்தில் தோன்றியுள்ளார். அதுவும் இளைய திலகம் பிரபு படத்தில் தோன்றி இருக்கிறார் என்பது தான் கூடுதல் சிறப்பு.

தமிழில் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ராஜாதி ராஜா’. பாட்ஷா திரைப்படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் பிரபு, கவுதமி, ரேவதி, நாசர், சரத்குமார் ,ஆனந்தராஜ், நாகேஷ், ஜனகராஜ் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தார்கள்என்று பலர் நடித்து இருந்தனர். மேலும், இந்த படத்தில் நடிகர் பிரபுவுடன் ஒரு சிறிய காட்சியில் நடித்து இருப்பார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான லக்ஷ்மன் சிவராமகிருஷணனும் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : ஒரே செகண்ட் தான் சிரிச்சேன் டோட்டல் சீனும் டெலிடட் – மாஸ்டர் டெலீடட் வீடியோவால் மீம் கிரியேட்டர்களிடம் சிக்கிய கௌரி கிஷன்

Advertisement

இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிகர் பிரபு லிப்ட் கேட்டு காரில் செல்லும் போது இவர் தான் பிரபுவிற்கு லிப்ட் கொடுப்பார். அப்போது இவரிடம் நடிகர் பிரபு, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பற்றி பேசுவார். பின்னர் இவர் பிரபுவிடம் தான் தான் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன் என்று கூறி பிரபுவை கரை விட்டு இறக்கிவிடுவார்.

இந்த தகவலை கிரிக்கெட் வீரரான லக்ஷ்மனே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் வீரரான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இந்திய அணிக்காக சொற்பமான போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். மேலும், இவர் 1987 ஆம் ஆண்டு உலக கோப்பை இந்திய அணியிலும் இடம்பிடித்தார். தற்போது இவர் கிரிக்கெட் வர்ணனையாளலாரா திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement