'பிகில்' படத்துல நான் 6 மாதம் நடிச்சேன், ஆனால் சம்பளம்? உண்மையை உடைத்த நடிகை இந்திரஜா
தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். முதலில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் தான் பங்கேற்றார். அதன் பின் தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து இருக்கிறார்.
சிறிய இடைவெளிக்கு பின் இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், இவரின் ஒரு மகள் இந்திரஜா. இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பிகில்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகஅறியப்பட்டார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். அதற்குப் பின் இவர் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்த சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார்.
இந்திரஜா குறித்த தகவல்:
இவரால் இறுதிவரை தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த ‘விருமன்’ படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே, இந்திரஜா தனது முறை மாமா கார்த்திககை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் இந்திரஜா படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ரோபோ சங்கர் உடல்நிலை குறைவால் இறந்தது அனைவரும் அறிந்தது. தன் தந்தையின் இழப்பால் இந்திரஜா ரொம்பவே மனம் உடைந்து இருந்தார்.
இந்திரஜா பேட்டி:
தற்போது தான் அதிலிருந்து இந்திரஜா மீண்டு வருகிறார். இவர் நிகழ்ச்சிகள், சினிமா என்று பிசியாக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான டிஎன் 2026 படத்தில் இந்திரஜா நடித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்திரஜா, என்னுடைய முதல் படம் பிகில். அதற்காக நான் 180 நாள் வேலை செய்தேன். அதாவது ஆறு மாதம் வேலை செய்தேன். டப்பிங் உட்பட எல்லா வேலையும் சேர்த்துதான் சொல்கிறேன். இதில் எல்லாத்துக்கும் சேர்த்து எனக்கு கிடைத்த சம்பளம் 3 லட்சம் ரூபாய் தான். அந்த நேரத்தில் நான் புதுமுகம். அதனால் தான் பிகில் வாய்ப்பை விட கூடாது என்று அப்பா சொன்னார்.
பிகில் சம்பளம்:
என்னுடைய அப்பா, தன்னுடைய 15 வருட சினிமா வாழ்க்கைக்கு பிறகுதான் மேட்லயாச்சும் விஜய் சாரோட நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது என்று சொன்னார். புலி படத்தில் கிரீன் மேட்ல அப்பா நடிக்கும் போது விஜய் சார் ஸ்பாட்டில் இல்லை. அவர் தனியாக வந்து சூட் பண்ணுவார். ஆனால், படத்தில் பார்க்கும்போது ரெண்டு பேரும் ஒண்ணா நடித்த மாதிரி இருக்கும். ஆனால், உனக்கு முதல் படத்திலேயே விஜய் சாரோட சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் சம்பளத்தை பார்க்காதே என்று சொன்னார். அதே சமயம்
டிஎன் 2026 படத்தில் நான் ஒரே ஒரு நாள் தான் நடித்தேன். அதற்கு எனக்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது.