'இத பாத்து கூசாத கண்ணு, இப்போ கூசிரிச்சோ' 1981-ல் வெளியான பாரதி ராஜாவின் பட போஸ்டரை பதிவிட்டு இரண்டாம் குத்து இயக்குனர் பதிலடி.

By Rajkumar · 8/10/2020

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'ஹர ஹர மஹாதேவிக்கி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அதன் பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து ' படத்தின் மூலமும் ஒட்டுமொத்த இளசுகளையும் கவர்ந்தார். இந்த திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

https://twitter.com/santhoshpj21/status/1314068431537233920

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தெலுங்கில் ரீ மேக் செய்து அதிலும் வெற்றிகண்டார் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இந்த நிலையில் இருட்டு அறையில் முருட்டு குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் டீஸர் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும். பெரும்பாலானோர் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கு எதிரியாக பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த படக்குழுவை கடுமையாக விமர்சித்துள்ளார் பாரதிராஜா. அதிலும் குறிப்பாக சினிமா வியாபாரமும்தான். ஆனால் வாழைப்பழத்தை குறிகளாகச் செய்து அதைக் கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது.

https://twitter.com/offBharathiraja/status/1314066766398541829

“இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன். இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? என்று கடுமையாக குறிப்பிட்டுள்ளார் பாரதி ராஜா.

இப்படி ஒரு நிலையில் பாரதிராஜாவின் இந்த அறிக்கைக்கு பதில் அளித்துள்ள இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர், பாரதி ராஜா இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான 'டிக் டிக் டிக்' படத்தில் இடம்பெற்ற ஒரு போஸ்டரை பதிவிட்டு 'மதிப்பும் மரியாதையுடன் இதை சொல்கிறேன்,, டிக் டிக் டிக் படத்துல இத பாத்து கூசாத கண்ணு, இப்போ கூசிரிச்சோ' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full