டேய், பேட்டிய கட்பண்றா - பெண் கேட்ட கேள்வியால் பாதியிலேயே சென்ற இரண்டாம் குத்து இயக்குனர்.

By Rajkumar · 14/11/2020

தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அடல்ட் காமெடி திரில்லர் படமாக வெளிவந்த இந்த படத்தில் ஆபாச காட்சிகளும் இரட்டை அர்த்த வசனங்களும் இருந்ததால் இதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் இளைஞர்கள் மத்தியிலும் வணிக ரீதியாகவும் இந்த படம் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இரண்டாம் குத்து என்ற பெயரில் எடுத்துள்ளார் இந்த படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். மேலும் இந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=FDGDtor-DMU&feature=emb_title

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் டீஸர் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும். பெரும்பாலானோர் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கு எதிரியாக பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இந்த படக்குழுவை கடுமையாக விமர்சித்துள்ளார் பாரதிராஜா. அதிலும் குறிப்பாக சினிமா வியாபாரமும்தான்.“இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன்.

இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? என்று கடுமையாக குறிப்பிட்டு இருந்தார் பாரதி ராஜா. இதற்கு சந்தோஷ், டிக் டிக் டிக் படத்துல இத பாத்து கூசாத கண்ணு, இப்போ கூசிரிச்சோ' என்று பதிலடி கொடுத்திருந்தார். அதன் பின்னர் அந்த அறிக்கை படித்துவிட்டு வந்த கணத்தின் வெப்பத்தில் எனது டுவிட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டு விட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்கு பிறகு நாம் அவசரத்தில் இதை செய்திருக்க கூடாது என்று மனம் கூறியது. ஆகவே நான் போட்ட ட்வீட்ஸ் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

https://twitter.com/aashameera/status/1327178728883904514

இப்படி பல்வேறு தடைகளுக்கு பின்னர் இந்த திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்த படத்தின் இயக்குனரிடம் பேட்டி எடுத்த பெண் ஒருவர் 'நீங்கள் பெண்களை ஒரு காட்சி பொருளாக பயன்படுத்தாமல் ஒரு அடல்ட் காமெடி படத்தை எடுக்க முடியாதா' என்று கேள்வி கேட்டிருந்தார். இதனால் கடுப்பான இயக்குனர் அப்போது எந்த பெண்ணும் கவர்ச்சியான உடை அணியக் கூடாது என்று ஒரு பெண் நீங்களே சொல்லுகிறீர்களா ? பக்குவம் இல்லாத கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என்று அந்த பேட்டியில் இருந்து பாதியிலேயே சென்றுவிட்டார்.

behindtalkies AMP · Quick view
View full