நிச்சயம் முடித்த நிலையில் திருமணத்தை நிறுத்திய இர்பான், காரணம் இது தானாம். அவரே வெளியிட்ட வீடியோ.

By Rajkumar · 13/2/2022

யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவு இடுவார். இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம். இவர் பல ஊர்களுக்கு சென்று பல ஓட்டல்களில் சாப்பிட்டு அதற்கான கருத்துக்களை போடுவார். மேலும், இவர் எப்போதும் அரை டவுசர் போட்டுக்கொண்டு தான் சந்து கடை முதல் வெளிநாடுகள் உள்ள காட்ஸ்லி ஹோட்டல் வரை சென்று உணவை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ போடுவார். இதன் மூலம் இவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது.

ஒருமுறை விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உலகநாயகன் கமலஹாசன் கூட இர்பானின் யூடியூப் வீடியோக்களை ரசித்து பார்ப்பேன் என்று கூறியிருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் சாப்பிடுவதை பார்த்தால் எனக்கே பொறாமையாக இருக்கும் என்றெல்லாம் பாராட்டி இருந்தார். அந்த அளவிற்கு மிகப் பிரபலமான நபராக திகழ்கிறார் இர்பான். இப்படி உணவுகளை விமர்சித்து வந்த இர்பானுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது என்று இவருடைய நண்பர்கள் நிச்சயதார்த்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்கள். இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பின் உடனே இர்பான் இதற்கு விளக்கம் கொடுத்து பதிவு போட்டு இருந்தார்.

இர்பான் நிச்சயதார்த்தம் பற்றிய தகவல்:

அதில் அவர், எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. என்னுடைய ஃபுல் காஸ்டியூம் உடன் இருக்கும் புகைப்படத்தை பாருங்கள் என்று பகிர்ந்து இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்கள். மேலும், இவருடைய நிச்சயதார்த்தம் முடிந்து 4 மாதத்தில் திருமணம் நடக்க இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ரசிகர்களும் நெட்டிசன்களும் உங்களுடைய திருமணம் எப்போது என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அதோடு இர்பான் சொன்னதுபோல் நாலைந்து மாதம் முடிந்தும் இவருடைய திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இது குறித்து ரசிகர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=8cYlkPBWECc

திருமணம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகள்:

இந்நிலையில் அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் இர்பான் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததைத் தொடர்ந்து எல்லோரும் என்னுடைய திருமணம் குறித்து கேட்டு வருகிறார்கள். தினமும் அதை குறித்து ஏதாவது ஒரு கேள்வியை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். இதை நான் தவறு என்று சொல்லவில்லை. என் மீது அக்கறை கொண்டு இப்படி கேட்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய திருமணம் நின்றுவிட்டது. தள்ளி வைக்கவில்லை, நின்றுவிட்டது. ஏனென்றால், என்னுடைய எண்ணத்திற்கும் அவங்களுடைய எண்ணங்களும் சரியாக பொருந்தவில்லை.

விளக்கம் கொடுத்த இர்பான்:

நான் எல்லாம் சரியாக பொருந்தனும் என்று சொல்லவில்லை. திருமணம் என்பது ஒரு முறை தான். கடைசி வரையும் நான் அவருடன் பயணிக்க வேண்டும். ஆனால், எனக்கு செட் ஆகவில்லை என்று தெரிந்து தான் நிறுத்திவிட்டேன். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு எனக்கு மனதில் ஏதோ வேண்டாம் என்று தோன்றியது. இதை பற்றி எங்கள் வீட்டில் சொன்னவுடன் முதலில் வீட்டை ஒத்துக் கொள்ளவில்லை. என்னை மனநிலை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தார்கள். இருந்தும் எவ்வளவு நான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முயற்சித்தாலும் என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. பிடிக்காத ஒருவரிடம் சேர்ந்து வாழ்க்கையை வாழ முடியாது. இது அவர்களுக்கும் கஷ்டம், எனக்கும் கஷ்டம். அதுமட்டுமில்லாமல் திருமணம் என்பது இருவர் சேர்வது மட்டும் இல்லை.

https://www.youtube.com/watch?v=EVo28bbrzmk

திருமணம் நின்றதுக்கான காரணம்:

இரு குடும்பங்கள் இணைவது. இதனால் பல பேருடைய நிம்மதி இழந்து விடும் என நினைத்து தான் நான் திருமணத்தை நிறுத்தி விட்டேன். திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பின் எங்கள் வீட்டில் கையில் காலில் விழாத குறையாக பேசி பிறகு தான் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். பின் பெண் வீட்டிலும் என்னுடைய சூழ்நிலை எடுத்து சொன்னேன். அவர்களும் புரிந்து கொண்டு சரி என்று சொல்லிவிட்டார்கள். என்னுடைய ரசிகர்களுக்கும் இதை சொல்லனும் என்று தான் இந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறேன். என்னுடைய திருமணம் நின்றுவிட்டது தள்ளிப் போக வில்லை. தயவு செய்து இனிமேல் திருமணம் பற்றி கேட்காதீர்கள். வேறு ஏதாவது ஜாலியாக பேசலாம் என்று கூறியிருந்தார். இப்படி இர்பான் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full