யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம். இவர் பல ஊர்களுக்கு சென்று பல ஓட்டல்களில் சாப்பிட்டு அதற்கான கருத்துக்களை போடுவார்.

மேலும், இவர் எப்போதும் அரை டவுசர் போட்டுக்கொண்டு தான் சந்து கடை முதல் வெளிநாடுகள் உள்ள காட்ஸ்லி ஹோட்டல் வரை சென்று உணவை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ போடுவார். இதன் மூலம் இவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது. இப்படி உணவுகளை விமர்சித்து வந்த இர்பானுக்கு நிச்சயதார்த்தம் நடந்து பாதியிலேயே முடிந்தது. இது குறித்து இர்பான் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்கள். பின் இவருக்கு சமீபத்தில் திருமணம் ஆனது.

Advertisement

இர்பான் பற்றிய தகவல்:

மேலும், இரப்பான் சினிமா பிரபலங்கள் உடன் உணவு சாப்பிட்டு பேட்டி எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் இர்பான் அவர்கள் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் பேட்டி எடுத்திருக்கிறார். அப்போது இர்பான், வலிமை படத்தின் கதையை தன்னுடைய கல்லூரியில் நடந்தது போல சுவாரசியமாக சொல்லியிருந்தார். இதை நாக சைதன்யாவும் சீரியஸாக கேட்டிருக்கிறார். அவருக்கு கடைசி வரை அது வலிமை படம் தான் என்று தெரியவில்லை.

நெட்டிசன்கள் விமர்சனம்:

இருந்தாலும், சுவாரசியமாக இர்ப்பான் வாழ்க்கையில் நடந்தது என்று கேட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்து பலரும் கிண்டல் அடித்து இப்படி எல்லாம் ஏமாற்றுவதா? வலிமை படம் பாக்கலையா? என்றெல்லாம் ட்ரோல் செய்து வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். கடந்த ஆண்டு அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக வலிமை கொண்டாடப்பட்டு இருந்தது.

Advertisement

பல போராட்டங்களுக்கு பின் பிறகு வலிமை படம் ரிலீசானது. இந்த படத்தை வினோத் இயக்கி இருக்கிறார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள் . இந்த படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்து உள்ளார். மேலும், வலிமை படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து இருந்தார்கள்.

Advertisement

அஜித் நடிக்கும் படம்:

இதை அடுத்து சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த படம் துணிவு. இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடா முயற்சி. இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.

Advertisement