திருமணத்தை நிறுத்திய சில மாதத்தில் முடங்கிய யூடுயூப் சேனல் - அடுத்தடுத்து சோகத்தால் கலங்கிய இர்பான். அவரே வெளியிட்ட வீடியோ.
தன்னுடைய யூடுயூப் சேனல் முடக்கப்பட்டது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இர்பான். யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவு இடுவார். இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம். இவர் பல ஊர்களுக்கு சென்று பல ஓட்டல்களில் சாப்பிட்டு அதற்கான கருத்துக்களை போடுவார்.
மேலும், இவர் எப்போதும் அரை டவுசர் போட்டுக்கொண்டு தான் சந்து கடை முதல் வெளிநாடுகள் உள்ள காட்ஸ்லி ஹோட்டல் வரை சென்று உணவை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ போடுவார். இதன் மூலம் இவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது.ஒருமுறை விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உலகநாயகன் கமலஹாசன் கூட இர்பானின் யூடியூப் வீடியோக்களை ரசித்து பார்ப்பேன் என்று கூறியிருந்தார்.
நிச்சயம் செய்த நிலையில் திருமணத்தை நிறுத்திய இர்பான் :
அதுமட்டும் இல்லாமல் இவர் சாப்பிடுவதை பார்த்தால் எனக்கே பொறாமையாக இருக்கும் என்றெல்லாம் பாராட்டி இருந்தார். அந்த அளவிற்கு மிகப் பிரபலமான நபராக திகழ்கிறார் இர்பான். இப்படி உணவுகளை விமர்சித்து வந்த இர்பானுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது என்று இவருடைய நண்பர்கள் நிச்சயதார்த்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்கள். இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பின் உடனே இர்பான் இதற்கு விளக்கம் கொடுத்து பதிவு போட்டு இருந்தார்.
https://www.youtube.com/watch?v=EVo28bbrzmk
திருமணம் நின்றதுக்கான காரணம்:
எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததைத் தொடர்ந்து எல்லோரும் என்னுடைய திருமணம் குறித்து கேட்டு வருகிறார்கள். தினமும் அதை குறித்து ஏதாவது ஒரு கேள்வியை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். இதை நான் தவறு என்று சொல்லவில்லை. என் மீது அக்கறை கொண்டு இப்படி கேட்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய திருமணம் நின்றுவிட்டது. தள்ளி வைக்கவில்லை, நின்றுவிட்டது. ஏனென்றால், என்னுடைய எண்ணத்திற்கும் அவங்களுடைய எண்ணங்களும் சரியாக பொருந்தவில்லை.
இர்பானின் யூடுயூப் பக்கம் முடக்கம் :
நான் எல்லாம் சரியாக பொருந்தனும் என்று சொல்லவில்லை. திருமணம் என்பது ஒரு முறை தான். கடைசி வரையும் நான் அவருடன் பயணிக்க வேண்டும். ஆனால், எனக்கு செட் ஆகவில்லை என்று தெரிந்து தான் நிறுத்திவிட்டேன் என்று கூறி இருந்தார். மேலும், சமீப காலமாக வீட்டுற்கு கூட போகாமலே தனியாக தான் இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இர்பானின் யூடுயூப் பக்கம் விதிமுறைகளை மீறியதாக யூடியூப் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://www.youtube.com/watch?v=kJoXrNFhl_E&t=294s
வீடியோ வெளியிட்டு உருக்கம் :
Community Standard-ஐ மீறியதாலும், Youtube Guidelines-ஐ சரிவர பின்பற்ற முடியாமல் போனதாலும் இவரின் சேனல் முடக்கப்பட்டுள்ளதாக youtube தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை விளக்கி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் இர்ஃபான். அதில் என்னுடைய 6 வருட உழைப்பு ஒரே நாளில் வீணாகிவிட்டது. அதற்கான காரணம் என்னவென்பதை நாங்கள் கேட்டு இருக்கிறோம். அனைவரும் ஆறுதல் சொன்னாலும் மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது என்று மிகவும் தழுதழுக்க அவர் கூறி இருக்கிறார்,.