விஜய் வீட்டில் ரெய்ட்டு போனது தவெக பொது செயலாளரா அருண்ராஜ் ஐஆர்எஸ்? பின்னணி இது தான்

By subhashini · 10/6/2025

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய படைப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது. இதை அடுத்து தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் இவர் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது.

இதை அடுத்து இவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக விஜய் செயல்பட்டு வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் தன்னுடைய முதல் மாநாட்டை பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் விஜய் நடத்தி இருந்தார். வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்திருக்கிறார். அதோடு இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள்.

விஜய் அரசியல்:

இப்படி இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் அருண்ராஜ் ஐஆர்எஸ் என்பவர் இணைந்து இருக்கிறார். இவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சியில் சேர்ந்து இருக்கிறார். கட்சியில் சேர்ந்த சில நிமிடங்களிலேயே அருண்ராஜ் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் என்ற பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஆனந்த் மற்றும் அர்ஜுனாஆகியோர் பொதுச் செயலாளராக இருக்கிறார்கள். தற்போது மூன்றாவது பொதுச் செயலாளராக அருண்ராக் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
விஜய்யின் முன்னிலையில் தான் அருண்ராஜ்க்கு பொதுச் செயலாளர் பதவி நியமனம் செய்யப்பட்டது.

தவெகவில் அருண்ராஜ்:

விஜயுடன் சந்திப்பு நிறைவடைந்ததுமே அருண்ராஜ் ஐஆர் எஸ், ஆதவ் அர்ஜுனா இருவருமே செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார்கள். அதில் அருண்ராஜ், இந்த நாள் எனக்கு ரொம்ப சந்தோசமான நாள். சின்ன வயதிலிருந்தே மதசார்பற்ற அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் மீது எனக்கு ஈடுபாடு இருந்தது. தேர்தல் வெற்றி தோல்விகளை கடந்து அடிப்படை சமூக அரசியல் மாற்றம் வேண்டும் என்று விஜய் எடுத்து இருக்கும் இந்த முயற்சியில் என்னையும் இணைத்துக் கொண்டிருப்பதில் சந்தோஷப்படுகிறேன்.
மற்ற கட்சிகளில் இணைய வேண்டும் என்ற சாய்ஸ் எனக்கு இருந்ததே இல்லை.

https://www.youtube.com/watch?v=D6C4ydbnn08

காரணம், எல்லா கட்சிகளையும் எத்தனை வருஷமாக பார்த்து விட்டோம். 70 ஆண்டுகள் பழமையான கட்சிகள் இருந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் தான் தமிழகத்திற்கு தேவையானவை. முதலில் நான் ஒரு சாமானிய மனிதன். அரசியலை சாமானிய மனிதர்கள் மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். நானும் அதையேதான் நினைத்தேன். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். நன்றாக பணி செய்தேன் என்ற திருப்பதி இருக்கிறது. ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் அரசியலுக்குள் வந்தேன். ஜனநாயக நாட்டில் மக்களிடம் உண்மையாக அதிகாரம் இருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தார்.

https://www.youtube.com/watch?v=W0VtgDN7UKM

உடனே விஜய் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடந்த போது நீங்களும் இருந்தீர்களா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு அருண், சிரித்தார். உடனே அருகில் இருந்த ஆதவ் அர்ஜுனா, அப்படி எதுவும் இல்லை என்று சொன்னார். அருண் கூட அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். மேலும், சில வருடங்களுக்கு முன்பு விஜய் வீட்டில் வருமான வரி சோதனை செய்த குழுவில் அருண்ராஜ் இருந்தார் என்று கூறப்படுகிறது. விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது வரி ஏய்ப்பு செய்ததாக இருந்த குற்றச்சாட்டுக்கு அவருடைய வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அதற்கு பிறகு தான் விஜயுடன் அருண் ராஜ் பழகதொடங்கினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full