'இசைவாணிக்கு துணையாக நிற்போம்' - நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கை
இசைவாணிக்கு ஆதரவாக நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் கானா பாடகர் இசைவாணி. இவர் வடசென்னை பூர்வீகமாகக் கொண்டவர். இவரை அனைவரும் கானா இசைவாணி என்றுதான் அழைப்பார்கள். தனக்கு உரிய கானா பாடலின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் இசை. குறிப்பாக ‘பெரிய கறி’ என்ற பாடலை பாடியதன் மூலம் இசைவாணி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
கஸ்தூரிக்கு ஒரு நீதி?
— மனதின் குரல் 🇮🇳(Mann Ki Batt) (@Namo3Namo) November 22, 2024
இசைவாணிக்கு ஒரு நீதியா?
பா ரஞ்சித் நடத்தும் நீலம் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் இந்து மத கடவுளை இழிவு படுத்தி பாடும் பாடகி இசைவாணிக்கு கடுமையான கண்டனங்கள்!
பாடகி இசைவாணியை கைது செய்யுமா தமிழக காவல்துறை? pic.twitter.com/JRPk193IIh
பெண்கள் கால்பதிக்க தயங்கும் கானா இசை துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் இவருடைய கனவு, லட்சியம். அதுமட்டும் இல்லாமல் 2020 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய கானா திறமையை வெளிப்படுத்தி உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசி தேர்வு செய்து பெருமைப்படுத்தியது ஒருவராக என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் நிறைய இசை கச்சேரிகளில் பாடி இருக்கிறார்.
இசைவாணி சர்ச்சை:
இப்படி இருக்கும் நிலையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இசைவாணி பாடி இருக்கிறார் என்று எழுந்து இருக்கும் புகார் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இசைவாணி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். இதனால் இவர் நிறைய கிறிஸ்துவ மத பாடல்களை பாடி இருக்கிறார். அதோடு இவர் தன்னுடைய கானா மூலம் இவர் தன் மதத்தை மற்றவர்களுக்கும் பரப்புகிறார். அந்த வகையில் இவர் பா.ரஞ்சித் நடத்தி வரும் நீலம் பண்பாண்டு மையத்தின் இசை கச்சேரி விழாவில் நிறைய பாடல்களை பாடி இருக்கிறார்.
ஐயப்ப பக்தர்களின் விரதத்தையும், பழக்கத்தையும், ஐயப்பனையும் மிகவும் இழிவு படுத்தி பாடிய பாடகி இசைவாணியின் தேவ ஸ்தோத்திர பாடல்..
— அஜய் (@tony_ajey) November 21, 2024
Cryptoக்கள் சூழ் உலகம் !! pic.twitter.com/Q5etQRIlBw
ரஞ்சித்-இசைவாணி மீது புகார்:
குறிப்பாக, இவர் 'ஐ அம் சாரி ஐயப்பா' என்ற பாடலை நிறைய கச்சேரிகளில் பாடி இருக்கிறார். இது மிகப்பெரிய அளவில் வைரலாக, பலருமே கண்டனமும் தெரிவித்து இருந்தார்கள். அதோடு இவர் 'ஐ அம் சாரி ஐயப்பா' பாடலில் இந்து மதத்தை தாழ்த்தியும், கிறிஸ்தவ மதத்தை புகழ்ந்தும் பாடி இருக்கிறார்கள். கடந்த மாதம் நடந்த மார்கழி மக்கள் இசையில் கூட இவர் இந்த பாடலை பாடியிருந்தார். இவர் ஐயப்பன் பக்தர்களை தாக்கியும், ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பாடல்கள் இருக்கிறது என்று கண்டனம் தெரிவித்து பா. ரஞ்சித் மற்றும் இசைவாணியின் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அனைத்து பக்தர் சங்கத்தினர் புகார் கொடுத்து இருந்தார்கள்.
நீலம் பண்பாட்டு மையம் அறிக்கை:
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அதில், இசைவாணியுடன் துணை நிற்க வேண்டும். கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாலின பாகுபாட்டை முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அதை ஆதாரமாகக் கொண்டு மிகப்பெரிய விவாதமும் நடந்தது. அதை தொடர்ந்து நாட்டில் உள்ள முற்போக்கு இயக்கங்களும் பெண்களின் உரிமைக்கு ஆதரவாக நின்றன. இதே காலகட்டத்தில் தான் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பில் The Casteless Collective என்கிற இசை குழு உருவானது.
சமூகப் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை கலைந்து சமூக உரிமைகளை கூறும் ஒரு பாடல் வரிகளோடு The Casteless Collective பல பாடல்களை இயற்றியது. ஜாதி ஏற்றத்தாழ்வுகள் இட ஒதுக்கீடு எதிரான மனநிலை, உணவு பழக்கத்தில் நிலவும் பாகுபாடு, பெண்கள் மீது செலுத்தப்படும் தீண்டாமை உள்ளிட அவைகள் இதில் அடங்கும். அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்ய உரிமை கோருகிற பாடல்களாக தான் அவை இயற்றப்பட்டது. “ஐ எம் சாரி ஐயப்பா(I am sorry Iyyappa)" என்கிற பாடல் ஆண்டாண்டு காலமாய் இங்கு பேசப்பட்டு வரும் கோயில் நுழைவு உரிமையைக் கோருகிற வரிகளோடு துவங்கி, பின் பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் பொதுவான உரிமைகளைக் கோரும் பாடலாக அமையப்பெற்றது. இப்பாடலை பாடியது இசைவாணி.
அடிப்படை உரிமையைக் காப்போம், இசைக்கலைஞர் இசைவாணியுடன் துணை நிற்போம்!@beemji @GIsaivani @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamBooks @makkalisai #Isaivani #neelamsocial pic.twitter.com/xd8wZeHVqm
— Neelam Social (@NeelamSocial) November 24, 2024
இதை எழுதி இசையமைத்தது ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’(The Casteless Collective). அதற்குப் பின்னால் பல்வேறு மேடைகளில் பாடல்களைப் பாடி வருகிறது. ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு, இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடப்பட்ட பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக் கொண்டு கடந்த ஒரு வார காலமாகச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறது ஒரு குழு. அடிப்படையில் அது ஐயப்பன் சம்மந்தப்பட்ட பாடலே அல்ல. பெண்களின் பல்வேறு உரிமைகளைக் கோரும் வரிகளில் கோயில் நுழைவைக் கோரும் உரிமையும் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த முழு உண்மையை மறைத்து, அந்த மொத்தப் பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானதாக இருக்கிறது என, சமூக வலைதளத்தில் பொய் செய்தியைப் பரப்ப முயற்சிப்பதின் மூலம், சமூகப் பதற்றத்தை உருவாக்கி விட முடியும் என முயல்கிறது ஒரு கூட்டம். கடந்த ஒரு வார காலமாக பாடகர் இசைவாணியை ஆபாசமாகச் சித்திரித்தும், தொலைபேசியில் மிரட்டியும், சமூகவலைதளத்தில் அவதூறுகளைப் பரப்பியும் வருகின்றனர்.
ஒரு கலைஞர் மீது வைக்கப்படும் குறி என்பது தனிநபர் சம்மந்தப்பட்டது கிடையாது. அந்த மிரட்டல் இனி உருவாகி வரவிருக்கும் கலைஞர்களுக்கும் சேர்த்தே என்பதுதான். சட்டப்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகர காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். கோயில் நுழைவு என்பது அடிப்படை உரிமை. சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மறுக்கப்பட்டவைகளை கேள்வி கேட்டுக்கொண்டே வந்ததின் விளைவாகத்தான் இன்று அவை சட்டமாக்கப்பட்டு இருக்கின்றது. அந்த அடிப்படை உரிமைக்கு எதிரான செயல்பாட்டை கண்டித்து தான் இந்த பாடல் உருவாக்கப்பட்டது. இந்த நோக்கத்தை புரிந்து கொண்டு செயல்படும், ஜனநாயகத்தை நம்பும் சக்திகள் ஒவ்வொருவரும், பாடகி இசைவானிக்கு துணை நிற்க கேட்டு கொள்கிறேன் என்று கூறப்பட்டிருக்கிறது.