இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் விமர்சனம் இதோ.!

By Rajkumar · 15/3/2019

பியார் பிரேமா காதல் என்ற வெற்றி படத்தை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள படம் is இஸ்பேட் ராஜாவும் இதயராணியும். இந்த திரைப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 'புரியாத புதிர்' என்ற படத்தை இயக்கியவர் ஆவார். இவரது இரண்டாம் படைப்பான
இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் திரைப்படம் எப்படிஇருக்கிறது என்பதை கொஞ்சம் அலசலாம்.

படம்:- இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
இயக்குனர்:- ரஞ்சித் ஜெயக்கொடி
நடிகர்கள் : – ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சிநாத்
மா.க. பா ஆனந்த் , பொன்வண்ணன், பன்னீர் புஷ்பங்கள், லிஸ்லீ ஆண்டனி, திவ்யா பால சரவணன் மற்றும் பலர்.
தயாரிப்பு : – மாதவ் மீடியா
இசையமைப்பளார் :-சாம் சி எஸ்
வெளியான தேதி : 15-03-18

கதைக்களம் :

படத்தின் தலைப்பில் இருந்தே இந்த படத்தின் கதை களத்தை நீங்கள் யூகித்திருக்கலாம். ஆம், இது ஒரு வழக்கமான காதல் கதை தான். கௌதம் ( ஹரிஷ் கல்யாண் ) அடிதடி சண்டை என்று முரட்டுத்தனமாக இருந்து வருகிறார். சிறு வயதில் கௌதமின் அம்மா வேறு ஒரு ஆணுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதால், அந்த விடயம் கௌதமை மனதளவில் பாதித்துவிடுகிறது.

இப்படியே அடிதடி சண்டை என்று போய்க் கொண்டிருக்கும் கௌதம் வாழ்க்கையில் வருகிறாரார் தாரா (ஷில்பா மஞ்சுநாத்) ஆனால், இவரோ கௌதமின் அதற்கு நேர் எதிராக மிகவும் அமைதியான மாடர்ன் பெண்ணாக இருந்து வருகிறார். அம்மா பாசம் என்றால் என்னவென்று தெரியாமல் தந்தையுடன் வாழ்ந்து வரும் கௌதமின் வாழ்க்கைக்கு ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்க அதனை பூர்த்தி செய்யும் விதமாக தாரா வருகிறார்.

இரண்டு வெவ்வேறு குணங்களைக் கொண்ட இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துவிடுகிறது. ஆனால், காதலித்து பின்னரும் தனது காதலியிடம் அடிக்கடி கோபப்பட்டுக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு வருகிறார் கௌதம். இப்படியே போய்க் கொண்டிருக்க தங்களது காதலுக்காக வீட்டில் சம்மதம் வாங்க படாதபாடு படுகிறார் தாரா. ஆனால் தனது கோபத்தால் தாராவின் பெற்றோர்களிடமே கெட்ட பேரும் எடுத்துவிடுகிறார் கௌதம்.

இதனால் இவர்களுக்கு பயங்கர சண்டை ஏற்படுகிறது இருப்பினும் ஒருவரையொருவர் அனுசரித்துக்கொண்டு தங்கள் காதலை தொடர்கின்றனர். இறுதியில் கௌதம், தனது கோபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாரா? இருவரும் காதலில் வெற்றி பெற்று திருமணம் செய்து கொண்டார்களா? இல்லையா ?என்பதுதான் படத்தின் மீதி கதை.

பிளஸ் :


இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பாவின் நடிப்பு மிகவும் பாராட்டக் கூடியது. மற்ற படங்களைப் போல் இல்லாமல் இந்த கதாநாயகியின் கதாபாத்திரத்தில் முக்கியத்துவம் கொடுத்துள்ளது பாராட்டத்தக்கது. சாம் சி எஸ் இசை பற்றி இந்த படம் வருவதற்கு முன்பாகவே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படத்தில் மாகாபா ஆனந்த் மற்றும் பாலா சரவணன் ஆகியோரின் காமெடி எரிச்சல் ஒட்டாமல் இருக்கிறது.

மைனஸ் :

படத்தின் மைனஸ் என்றால் இரண்டாம் பாதியில் கொஞ்சம் இழுவை தெரிகிறது. அதேபோல 'டாஸ்மார்க்' பாடல் மற்றும் ஒரு சில காட்சிகள் கதைக்கு தேவைப் படாமல் இருக்கிறது. தேவ் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் இமாலயாவில் ஏறுவது போல ஒரு காட்சி அமைந்திருக்கும், அதைப்பற்றி நீங்கள் படத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.

இறுதி அலசல் :

வழக்கமான காதல் கதையை ஒரு சிறப்பான திரைக்கதை மூலமும் வலுவான கிளைமாக்ஸ் மற்றும் சோசியல் மெசேஜ்ஜுடன் மூலமும் உருவாக்கியுள்ளார் படத்தின் இயக்குனர். தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டியின் சாயல் இந்த படத்தில் இருந்தாலும் இந்த படமும் ஒரு வித்தியாசமான காதல் கதையாக நிச்சயம் இளைஞர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.

behindtalkies AMP · Quick view
View full