மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சட்டசபையில் மத்திய அமைச்சர் கூறியது சரி தான் என்று தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.  சமிபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் ஜெயலலிதாவிற்கு சட்டசபையில் அவருக்கு நடைபெற்ற இன்னல்கள் குறித்து பேசினார். அதில் 1989ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு அப்போதையை ஆளுங்கட்சியாக இருந்த திமுக எம்.எல்.ஏ கள் அவரிடம் தகாத வார்த்தைகளாலும் அவரது சேலையை பிடித்து இழுத்து தகாத முறையில் திமுகவின் எம்.எல்.ஏ நடந்து கொண்டார் எனவும் அவர் கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியது.

முதல்வர் கருத்து:

இந்த கருத்து குறித்து மறுப்பு தெரிவித்த தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் இது போன்ற நிகழ்வு இங்கு நடைபெறவில்லையென்றும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏதோ வாட்ஸ் ஆப்பில் வரும் செய்திகளை நாடாளுமன்றத்தில் கூறி வருகிறார் என்றும் அவர் கூறியிருந்தார். அது அவராக நடத்தி கொண்ட நாடகம் அது அந்த அவையில் இருந்த அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

சட்டசபையில் இது போன்று நடந்து கொள்ள அவர் போயஸ் கார்டனில் ஒத்திகை பார்த்தார் என்றும் கூறினார். இது போன்ற பொய்யான தகவல்களை மத்திய அமைச்சர் கூறி இருப்பது வருத்தமளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

தமிழிசை கருத்து:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நடைபெற்றது உண்மை தான். ஆனால் ஸ்டாலின் அவர்கள் மத்திய அமைச்சர் கூறிய தகவலை வாட்ஸ்  ஆப் செய்தியை பார்த்து பேசுவதாக கூறியிருந்தார். ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நடைபெற்றது உண்மை தான் அவர் கடுமையாக திமுகவினரால் தாக்கப்பட்டார். அவர் தன்னை காப்பற்றி கொள்வதற்கு கிழந்த உடையுடன் அவர் சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்தது உண்மை. அதற்க்கு தானே சாட்சி அப்போது என்னுடைய தந்தை எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்தார்.

Advertisement

இந்த சம்பவங்கள் நடைபெற்ற போது புத்தகங்கள் பறந்தது. அதில் எனது தந்தைக்கு கையில் முறிவு ஏற்பட்டது. இது போன்ற நிகழ்வு மிகவும் துரதிஷ்டமானது, இனி இது போன்ற சம்பவங்கள் தமிழக சட்டமன்ற வரலாற்றில்  நடைபெற்ற கூடாது என்றும் அவர் கூறினார். முதல்வர் அவ்வாறு கூறியது வருத்தமளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.                             

Advertisement
Advertisement