1989ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் நடைபெற்ற நாகரிகமற்ற செயலை முதல்வர் அதை நாடகம் என்று சொல்கிறார் அதற்கு நானே சாட்சி என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். சமிபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் ஜெயலலிதாவிற்கு சட்டசபையில் அவருக்கு நடைபெற்ற இன்னல்கள் குறித்து பேசினார்.

அதில் 1989ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு அப்போதையை ஆளுங்கட்சியாக இருந்த திமுக எம்.எல்.ஏ கள் அவரிடம் தகாத வார்த்தைகளாலும் அவரது சேலையை பிடித்து இழுத்து தகாத முறையில் திமுகவின் எம்.எல்.ஏ நடந்து கொண்டார் எனவும் அவர் கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியது.

Advertisement

முதல்வர் கருத்து:

இந்த கருத்து குறித்து மறுப்பு தெரிவித்த தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் இது போன்ற நிகழ்வு இங்கு நடைபெறவில்லையென்றும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏதோ வாட்ஸ் ஆப்பில் வரும் செய்திகளை நாடாளுமன்றத்தில் கூறி வருகிறார் என்றும் அவர் கூறியிருந்தார். அது அவராக நடத்தி கொண்ட நாடகம் அது அந்த அவையில் இருந்த அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார். சட்டசபையில் இது போன்று நடந்து கொள்ள அவர் போயஸ் கார்டனில் ஒத்திகை பார்த்தார் என்றும் கூறி இருந்தார்

எடப்பாடி கூறியது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சேலை பிடித்து இழுத்த போதும் அவரின் முடியை பிடித்து இழுத்த போதும் அவர் ஒரு பெண் என்றும் பாராமலும் எதிர்க்கட்சி தலைவர் என்றும் பாராமலும் இது போன்ற நிகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை. அப்போதே திமுக அரசு அவர்களை டிஸ்மிஸ் செய்து இருக்க வேண்டும். இது ஒரு கொடுமையான செயல் இது குறித்து செய்திதாள்களிலும் கூட செய்திகளை வெளியிடவில்லை.

Advertisement

நம்முடைய குடும்பத்தில் மகளுக்கோ தாய்க்கோ சகோதரிக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று இருந்தால் நமக்கு மனம் எப்படி துன்பப்பட்டு இருக்கும். அப்படி பட்ட வேதனையுடன் தான் புரட்சி தலைவி அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்து முதலமைச்சராக தான் வருவேன் என்று சொன்னார் அவர் சொன்னது போலவே மக்கள் அவரை அதிக இடத்தில் வெற்றி பெற வைத்தனர். அதில் நானும் வெற்றி பெற்றேன். அதையெல்லாம் மக்கள் பார்த்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.        

Advertisement
Advertisement