என்ன 5 வராம நாமினேட் பண்ணீங்க.! மீண்டும் பிரச்னையை கிளப்பிய மீரா.!

By Rajkumar · 26/7/2019

பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா சென்ற பிறகு படு போராக சென்று கொண்டு இருந்தது. ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் சேரன் மற்றும் மீராவிற்கு இடையே ஏற்பட்ட சண்டையால் பிக் பாஸ் வீடே இரண்டாக ஆகி விட்டது. இதுநாள் வரை அமைதியாக இருந்த மது ருத்ர தாண்டவம் ஆகிவிட்டார்.

https://twitter.com/vijaytelevision/status/1154594691658027008

நேற்றய நிகழ்ச்சியில் மீரா, சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாகவும், அவர் தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்ததாகவும் கூறியிருந்தார். இதனை அவமானமாக கருதிய சேரன் கதறி அழுதார். சேரன் அழுததை பார்க்கும் போது மிகவம் வருத்தமாக தான் இருந்தது.

மீரா, சேரன் தன்னை முரட்டுத்தனமாக தூக்கி வீசினார் என்று சொன்ன அந்த விடியோவை மீண்டும் மீண்டும் பார்த்ததில் சேரன், மீராவை எந்த வித நீக்கத்துடனும் தொட்டது போல தெரியவில்லை மேலும், அவர் கை வைத்து தள்ளியது அந்த அளவிற்க்கு முரட்டுத்தனமாக இருந்தது போன்றும் தெரியவில்லை.

இது ஒரு புறம் இருக்க இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்ஸை அடுத்து சேரன், மீரா, சரவணன், அபிராமி, கவின், சாக்க்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் சாக்க்ஷி தான் வெளியேற போகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full