தமிழில் ‘சின்னப்புள்ள’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர், 2008-ல் வெளியான ‘நாயகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதைத் தொடர்ந்து ‘பெண்சிங்கம்’ படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார் ரித்தீஷ்.

சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில், கே.ஆர்.பிரபு இயக்கத்தில் வெளியான படம் எல்.கே.ஜி. சமகால அரசியலைக் கேளிக்கை செய்த இப்படத்தில் ஜே.கே.ரித்தீஷ் இப்படத்தில் ராமராஜன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் நேற்று எதிர்பாராத விதமாக இவர் மாரடைப்பால் காலமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

போகலூர் பகுதி நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். . அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவர்து உதவியாளர்கள் அருகில் உள்ளமருத்துவமனைக்கு ரித்தீஷை தூக்கிச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ரித்தீஷ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ரித்தீஷை வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் வீட்டுக்குப் போன பின்னர் அவருக்கு இதயத் துடிப்பு இருந்ததைத் தொடர்ந்து மீண்டும் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவலகள் வெளியாகின. ரித்தீஷ் குறித்த முரண்பட்ட தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அவரது இறப்பை ராமநாதபுர தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

Advertisement
Advertisement