கோடி கணக்கில் பணம் பரிமாற்றம் செய்தேனா? ஜாஃபர் சாதிக் வழக்கு தொடர்பாக இயக்குனர் அமீர் வெளியிட்ட அறிக்கை

By subhashini · 27/7/2024

சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் நடந்தது தொடர்பான சர்ச்சைக்கு இயக்குனர் அமீர் வெளியிட்டிருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே போதை பொருள் கும்பலை கைது செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாகவே போதை பொருள் கடத்தல் கும்பலை டெல்லியில் கைது செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனில் போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள்.

அதில் சுமாராக 1700 கிலோ மெப்பட்ரோன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்து இருந்தார்கள்.
இந்த போதை பொருள் கடத்தலுக்கு முக்கிய நபராக செயல்பட்டவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சித்திக் என்பது தெரிய வந்தது. அது மட்டும் இல்லாமல் இவர் கயல் ஆனந்தி நடித்து வரும் மங்கை என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். இதற்கு முன் கூட இவர் சில படங்களை தயாரித்து இருந்தார். அதோடு இவர் போதை பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவராக இருந்தார்.

போதை பொருள் கடத்தல் விவகாரம்:

மேலும், இவர் தன்னுடைய சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து தான் இந்த போதப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார் என்பது தெரிய வந்தது. மைதீன், இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் சலீம் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதை அடுத்து போலீஸ், இந்த மூன்று பேருமே சினிமாவில் முதலீடு செய்துள்ளார்களா? என்னென்ன படத்திற்கு பைனான்ஸ் செய்திருக்கிறார்கள்? என்று தீவிர விசாரணைனையில் ஈடுபட்டது.

அமீர்- ஜாபர் இடையேயான உறவு:

அப்போது இயக்குனர் அமீர் அவர்கள் மைதீன் நடிக்கும் இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தை இயக்கி வருவது தெரிய வந்திருக்கிறது. இதனால் அமீருக்கும் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்று சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அமீர் விளக்கம் ஒன்றையும் வெளியிட்டார். அதில், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே. சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறி இருந்தார்.

அமீர் குறித்த சர்ச்சை:

இதை அடுத்து இயக்குனர் அமீர்- ஜாபிர் சாதிக் இருவரும் சேர்ந்து காபி ஷாப் ஒன்றை இணைந்து தொடங்கி இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இதனால் இயக்குனர் அமீரை போலீஸ் விசாரித்து இருந்தது. இந்த நிலையில் இயக்குனர் அமீர் உடைய வங்கி கணக்கிற்கு கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் அமீர் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அமீர் வெளியிட்ட அறிக்கை:

அதில் அவர், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் ஜாபிர் சாதிக்கின் மனைவி ஆமீனா வங்கி கணக்கில் இருந்து என்னுடைய வங்கி கணக்கிற்கு 1கோடி ரூபாய் பணம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது உண்மை கிடையாது. நான் இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்து முழு ஒத்துழைப்பை கொடுத்து வருகிறேன். என்னை இந்த வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்று சிலர் தேவையில்லாத வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். நான் எப்போதுமே சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது கிடையாது. எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full