படுக்கையறையில் மோசடி மன்னனுடன் ஜாக்லின் - லீக்கான புகைப்படத்தால் ஜாக்லின் வைத்த வேண்டுகோள்.

By Rajkumar · 9/1/2022

சமீப காலமாகவே சுகேஷ் மற்றும் அவரின் காதலி ஜாக்குலின் பெர்னாண்டஸ் குறித்த சம்பவங்கள் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்திய அளவில் அரசியல் புரோக்கராக செயல்பட்டு வந்தவர் சுகேஷ் சந்திரசேகர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப்பின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொடுப்பதற்காக 50 லட்சம் கோடி லஞ்சமாக பெற்றதாக சுகேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 2019ஆம் ஆண்டு அவரை திகார் ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து சுகேஷ் சட்டவிரோதமாக பல வழிகளில் பணம் மோசடி செய்து இருப்பதாக தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து சுகேஷ் மீது வலுவான பல வழக்குகள் விழுந்தது. மேலும், இவர் அனைத்து அரசியல் கட்சியினருடன் நெருங்கிய தொடர்பை வைத்துக் கொண்டு அதன் மூலம் கோடி கணக்கில் பணம் சம்பாதித்தது தெரியவந்தது. அதோடு சுகேஷ் சந்திரசேகரன் உடன் சேர்ந்து பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டதாக அவருடைய காதலி ஜாக்குலின் பெர்னான்டஸ் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சுகேஷ் சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

சுகேஷ் கொடுத்த பரிசு:

அதனடிப்படையில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடைய அவரது காதலி ஜாக்குலின் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையில் சுகேஷ் தனது காதலி ஜாக்குலினுக்கு பல கோடி ரூபாய் பணமும், விலைமதிப்பற்ற பரிசு பொருட்களும் கொடுத்து இருப்பது தெரியவந்தது. இருந்தும் ஜாக்குலின் போலீஸ்ஸிடம் சுகேஷ் உடன் இருந்த காதலையும், அவரின் சந்திப்பையும் மறுத்து வந்தார்.

ஜாக்குலின்- சுகேஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்:

இந்நிலையில் ஜாக்குலின்- சுகேஷ் நெருக்கமாக இருக்கும் செல்பி புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு உறுதியானது. இந்நிலையில் இது குறித்து இன்ஸ்டாகிராமில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் போஸ்ட் ஒன்று பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, இந்த நாடும் மக்களும் எனக்கு மிகப்பெரிய அன்பையும் மரியாதையையும் எப்போதும் கொடுத்திருக்கிறது.

ஜாக்குலின் போட்ட இன்ஸ்டா பதிவு:

இதில் எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்த என்னுடைய நண்பர்களும் அடங்கும். நான் தற்போது மிகவும் கடினமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன். அதை என்னுடைய நண்பர்களும் ரசிகர்களும் அறிவார்கள். அந்த நம்பிக்கையில் நான் ஊடக நண்பர்களுக்கு வைக்கும் கோரிக்கை என்னவென்றால், என்னுடைய தனிப்பட்ட புகைப்படத்தை பகிர வேண்டாம். இது எனக்கு பர்சனல். உங்களுக்கு அன்பானவர் ஒருவர் என்றால் இப்படி புகைப்படத்தை பகிர்வீர்களா?

கலாய்க்கும் நெட்டிசன்கள்:

எனக்கும் இதை செய்யாதீர்கள். எனக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி என்று தெரிவித்திருக்கிறார். இப்படி ஜாக்குலின் வேண்டுகோள் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த போஸ்டருக்கு பலவிதமாக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அமலாக்கத்துறை இடம் விசாரணையில் ஜாக்குலின் சுகேஷ் உடன் டேட்டிங் செய்ததையும், தனக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை காரணமின்றி தந்ததையும் ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full