சௌந்தர்யாவின் குரலை கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்த ஜாக்லின் - என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ
பகுத்தறிவு குறித்து பிக் பாஸ் முத்துக்குமரன் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக சமீபத்தில் தான் முடிந்தது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி இருந்தது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சியின் grand finale சுற்று நடந்து இருந்தது. முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருந்தார்.
பிக் பாஸ் 8:
இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, ஐந்தாம் இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நன்றி தெரிவித்து முத்துக்குமரன் வீடியோ போட்டு இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர்கள் தான் சௌந்தர்யா- ஜாக்லின்.
ஜாக்லின்-சௌந்தர்யா நட்பு:
இருவருமே மீடியா நபர்கள் தான். இருந்தாலும் இவர்களுக்கென்று ஒரு தனி பெயரை இந்த நிகழ்ச்சி தான் வாங்கித் தந்தது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் இடையே
சண்டை சச்சரவுகள் தான் வந்தது . பின் நாட்கள் செல்ல செல்ல இவர்கள் இருவரின் இடையே நட்பு உண்டானது. பின் 'கோவா கேங்' என்ற பெயரில் இவர்கள் இருவரும் செய்த லூட்டிக்கு அளவே இல்லை. இருவருமே சேர்ந்து கொண்டு தேவையில்லாத வேலை எல்லாம் செய்துள்ளார்கள். அதில் இவர்கள் செய்த சில விஷயங்கள் விஜய் சேதுபதியிடம் திட்ட எல்லாம் வாங்க வைத்திருந்தது.
மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படம்:
அதுமட்டுமில்லாமல் இருவருமே டாப் 5 வரை விளையாடி வந்தார்கள். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சௌந்தர்யாவிற்கு சப்போர்ட் செய்து ஜாக்லின் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது ரயான் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங். லாஸ்லியா, 'ஜம்ப் கட்ஸ்' ஹரிபாஸ்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங். இந்த படத்தை ஸ்ரீ தேன் ஆண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார்.
ஜாக்லின் செய்த செயல்:
பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தை பார்த்துவிட்டு சௌந்தர்யா- ஜாக்லின் இருவருமே ரிவ்யூ கொடுத்திருந்தார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர், சௌந்தர்யாவை பாடச் சொல்லியும், மொட்டை ராஜேந்திரன் மாதிரி குரல் இருக்கிறது என்றும் கிண்டலாக பேசி இருக்கிறார்கள். உடனே ஜாக்லின், உங்க குரல் அருமையாக இருக்கிறது. நீங்க பாடுங்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது