'சூர்யா அங்களோட நோக்கம் இதான்' - ஜெய் பீம் பட அல்லி வெளியிட்ட ஆவேசமான வீடியோ.

By Arun · 17/11/2021

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக பல வன்னிய சமூகத்தினர் குற்றம் சாட்டினார்கள். குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக வந்த ‘குருமூர்த்தி’ என்ற கதாபாத்திரத்தின் வீட்டில் இருக்கும் காலண்டரில் அக்னி குண்டம் படம் காட்டப்பட்டது.

https://twitter.com/chettyrajubhai/status/1460643115929194498

இது பல வன்னியர் சமூகத்தினரை காயப்படுத்தவாக குற்றச்சாட்டுங்கள் எழுந்தது. இதனால் படத்தில் அந்த அக்னி கலசம் நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த படத்தில் உண்மையான செங்கேணி பார்வதிக்கு நியாயம் கிடைக்க போராடிய வன்னியரின் பெருமையை சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதையும் பாருங்க : விஜய், சிம்புவிற்க்கு எல்லாம் ஜோடியாக நடித்த நடிகையா இது - பாத்தா நம்பவே மாடீங்க. இவருக்கு இவ்ளோ பெரிய மகனா ?

இந்த படத்திற்கு எதிராகவும் சூர்யாவிற்கு எதிராகவும் பல்வேரு வன்னிய அமைப்புகள் தொடர்ந்து எதிர்புகளை தெரிவித்து வருகிறது. அதே போல சூர்யாவிற்கு அவரது ரசிகர்கள் ஆதரவாக இருந்து வருகின்றனர். மேலும், பல்வேரு பிரபலங்களும் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் ராஜாகண்ணுவின் மகளாக அல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுமி ஜோஸிகா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஜெய் பீம் படம் மலைவாழ் மக்கள் நன்மைக்காக எடுக்கப்பட்ட படம். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும்ன்றது தான் சூர்யா அங்கள் நோக்கம். சூர்யா அங்கள் நெறய பேர படிக்க வச்சிட்டு இருக்காரு. யாரும் அவரை காயப்படுத்தற மாதிரி பேசாதீங்க. எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க. என்னுடைய சப்போர்ட் சூர்யா அங்களுக்கு. நன்றி என்று ஆவேசமாக பேசி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full