இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக பல வன்னிய சமூகத்தினர் குற்றம் சாட்டினார்கள். குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக வந்த ‘குருமூர்த்தி’ என்ற கதாபாத்திரத்தின் வீட்டில் இருக்கும் காலண்டரில் அக்னி குண்டம் படம் காட்டப்பட்டது. இது பல வன்னியர் சமூகத்தினரை காயப்படுத்தவாக குற்றச்சாட்டுங்கள் எழுந்தது.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் இந்த படம் குறித்து எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இதனால் இந்த படத்தை கண்டித்து வன்னிய சமூகத்தினர் சோசியல் மீடியாவில் வன்மையாக கண்டித்தும், போராட்டங்கள் நடத்தியும் இருந்தனர். அதிலும் சிலர் வன்னிய சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக படத்தில் வந்திருப்பதாகச் சொல்லி சூர்யா மீதும் இயக்குனர் மீதும் கண்டனம் தெரிவித்தும் அவர்களுக்கு எதிராக கோஷங்கள் இட்டும் வருகின்றனர்.

Advertisement

இதனால் அந்த காட்சியில் இடம்பெற்ற அக்னி குண்டம் படத்திற்க்கு மாறாக லட்சுமி தேவி புகைப்படத்தை வைத்து மாற்றம் செய்தனர் படக்குழு. இருப்பினும் இந்த படத்தில் கொடூரமான போலீசாக வரும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரமும் காடுவெட்டி குருவை குறிப்பிடுவதாகவும். உண்மையில் ராஜா கண்ணு வழக்கில் பேருதவியை இருந்த வன்னியரை இந்த படத்தில் காட்டவிலை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதை தொடர்ந்து பல்வேரு வன்னிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட மயிலாடுதுறை பா ம க உறுப்பினர் சித்தமல்லி பழனிச்சாமி சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க சூர்யாவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் நடிகர் டி ராஜேந்தர், சூர்யாவிற்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் தவறான காட்சி இருப்பதாக கூறி இருந்ததால், அந்த காட்சி உடனே படக்குழுவினரால் நீக்கப்பட்டது. அந்த முத்திரை இடம்பெற்றதற்கு சூர்யாவுக்கு சம்பந்தம் இல்லை.இதனால் உங்கள் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.இது நியாயம் இல்லை.இந்த செயல் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அரசியல்,ஜாதி,மத,இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன் விளிம்பு நிலை மாணவர்கள் மீது அக்கறை கொண்டு கல்வி பணியாற்றும் சூர்யா அவர்களை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement
Advertisement