தற்போது சோசியல் மீடியாவை ஓபன் பண்ணினாலே போதும் சூர்யாவின் ஜெய் பீம் படம் குறித்த கருத்துக்கள் தான் சென்று கொண்டு இருக்கிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா அவர்கள் ஜெய் பீம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்து வருகிறது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்துள்ளது. மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் பார்த்து பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜெய்பீம் படத்தில் வந்த கொடூரமான போலீசாக வந்த நடிகரின் மறுபக்கத்தை பற்றிய தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. ஜெய்பீம் படத்தில் எஸ்.ஐ. குருமூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வில்லனாக மிரட்டிய நடிகர் தமிழ். இவர் சினிமா உலகில் நடிகர் ஆவதற்கு முன்பு இயக்குனராக இருந்தார். விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற பல படங்களில் இயக்குனர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபுவை வைத்து டாணாக்காரன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

Advertisement

இந்த படத்தின் டிரைலர் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின் படம் வெளியாகவில்லை. இந்த படத்தின் ரிலீஸ் குறித்து எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் தமிழ் அவர்கள் ஜெய்பீம் படத்தில் ஒரு கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். உண்மையாலுமே அவரைப் நேரில் பார்த்தால் அனைவரும் பயப்படும் அளவிற்கு ஜெய்பீம் படத்தில் தத்ரூபமாக அவருடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தமிழ் சினிமா உலகில் நுழைவதற்கு முன்னர் தமிழ்நாடு காவல் துறையில் காவலராக பணிபுரிந்து உள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, நான் ஜெய்பீம் படத்தில் எஸ்.ஐ.குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன்.

இந்த கதாபாத்திரத்தின் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் கிடைத்தது. நான் சென்னையில் 10 வருடம் போலீசாக இருந்துள்ளேன். எனக்கு சினிமா மீது அதிக ஆர்வம், ஆசை இருந்ததனால் தான் போலீஸ் வேலையை விட்டு விட்டு எனக்குப் பிடித்த சினிமாவுக்குள் நுழைந்தேன் என்று கூறியுள்ளார். ஜெய் பீம் படம் உண்மையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. தமிழ் அவர்கள் உண்மையாலுமே காவலராக இருந்த காரணத்தினால் இந்த கதையோடு ஒன்றி விட்டார் என்று சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் இது உண்மை சம்பவம் என்பதால் இந்த கதையை நல்ல ஆழமாக தெரிந்து விசாரித்து படத்தில் நடித்துள்ளார். இவருடைய கதாபாத்திரம் குறித்து ரசிகர்களும் பொதுமக்களும் தாறுமாறாக கழுவி ஊற்றி வருகிறார்கள். பொதுவாகவே சினிமா துறையில் வில்லனை ரசிகர்கள் கழுவி ஊத்துவது வழக்கம் தான். அதிலும் தமிழ் தத்ரூபமாக நடித்து இருப்பதால் பலரும் இவரை சபித்து கூட வருகிறார்கள். உண்மையாலுமே இது அவருடைய நடிப்பு திறமைக்கு கிடைத்த பாராட்டு என்றே சொல்லலாம்.

Advertisement
Advertisement