பாக்கியலட்சுமி தொடரில் சமீப காலமாக இவரை பார்க்கவே முடியாலயே - ஜெய் சங்கர் வாரிசுக்கு இப்படி ஒரு நிலையா

By Rajkumar · 13/5/2023

காலங்காலமாகவே சினிமா பிரபலங்களின் வாரிசுகள் படங்களில் நடிப்பது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகரான ஜெய் சங்கரின் மகன் சின்னத்திரையில் கால் தடம் பதித்துள்ளார். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஜெய்சங்கரும் ஒருவர். இவர் பெரும்பாலும் படங்களில் சண்டை காட்சிகள், துப்பறிவாளன், காவலர் போன்ற வேடங்களில் தான் நடித்திருப்பார்.

இதனால் இவர் தென்னிந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என்றும் ரசிகர்கள் அழைத்து வந்தார்கள். இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இவர் நடிகர் மட்டுமில்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் படங்களில் நடித்து உள்ளார். மேலும், நடிகர் ஜெய்சங்கருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் விஜய் சங்கர். இவர் கண் மருத்துவராக உள்ளார். இளைய மகன் சஞ்சய் சங்கர். இவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதுமட்டும் இல்லாமல் சஞ்சய் சங்கர் இசை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதற்கு பிறகு இவர் தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் ஜெய்சங்கரின் மகன் சஞ்சய் சங்கர் அவர்கள் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் தொழிலதிபர் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. தற்போது சீரியலில் ராதிகா- கோபி இருவருமே பாக்யாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். வீட்டில் உள்ள எல்லோரும் அவர்களை வெளியே அனுப்ப பார்க்கிறார்கள். ஆனால், இருவருமே போகாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள்.என்ன செய்வதென்று புரியாமல் பாக்யாவும், மொத்த குடும்பமும் குழப்பத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் தான் ஜெனி கீழே விழுந்து வயிற்றில் அடிபடுகிறது. உடனே ராதிகா அவரை மருத்துவமனையில் சேர்த்து விடுகிறார். ஆனால், ராதிகா தான் ஜெனியே கீழே தள்ளிவிட்டார் என்று ஈஸ்வரி கோபப்படுகிறார். இதனால் ராதிகா-கோபி வெளியே போவார்களா? பாக்யா ராதிகாவிற்கு உறுதுணையாக நிற்பாரா? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

இதனால் இந்த தொடரில் நடித்த பல முக்கிய கதாபாத்திரங்கள் காணாமல் போய் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல தொழிலதிபர் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெய் சங்கர் மகன் சஞ்சய் சங்கர் கூட சமீப காலமாக இந்த தொடரில் காட்டப்படவில்லை. அதிலும் இந்த தொடரில் ரஞ்சித் என்ட்ரி கொடுத்ததில் இருந்தே சஞ்சய் சங்கர் இந்த தொடரில் காண முடிவதில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full