ரஜினி ரசிகர்களின் மிரட்டலுக்கு மத்தயில் சொன்னபடியே ஜெயிலர் படத்தை முதல் நாளே பார்த்துவிட்டு விமர்சனத்தை வெளியிட்ட ப்ளூ சட்டை.

By Arun · 11/8/2023

விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என்று யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார்.நடிகர்கள் முதல் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என யாரையும் விட்டுவைக்காமல் விமர்சித்து இருக்கிறார். மேலும், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது.

ஆனால், இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர். இவர் விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன. அந்த வகையில் இவர் ரஜினியை அடிக்கடி வம்பிழுத்து வருகிறார். அதிலும் அண்ணத்த படத்தின் போது இவர் படத்தை மட்டுமல்லாது ரஜினியையும் படு மோசமாக விமர்சித்து இருந்தார்.

அப்போது இருந்து இவருக்கு ரஜினி ரசிகர்களுக்கும் ட்விட்டரில் அடிக்கடி கமண்ட் போர் சென்று கொண்டு தான் இருக்கிறது.அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி, ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படத்தையும் ரஜினியையும் அடிக்கடி விமர்சித்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

https://www.youtube.com/watch?v=OZPPhKwaqik

சமீபத்தில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய விஷயங்களை கூட கேலி செய்து தொடர்ந்து ட்வீட் போட்டு ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றி வந்தார். இதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ட்விட்டர் ஸ்பேசில் ரஜினி ரசிகர்கள் பேசிய ஆடியோ பதிவை பகிர்ந்து போலீசில் புகாரும் அளித்தார் ப்ளூ சட்டை. இதனை தொடர்ந்து இப்படி ஒரு நிலையில் ரஜினி ரசிகர்களின் இந்த மிரட்டலுக்கு சவால் விட்டுள்ள ப்ளூ சட்டை 'டேய்.. நான் மாயாஜால்னு தெளிவாத்தான சொன்னேன்.

இப்ப எதுக்கு சம்மந்தமே இல்லாம கமலா தியேட்டர்னு பொய் சொல்லி.. சும்மா இருக்கற பசங்களையும் ரேக்கி விட்டுட்டு இருக்க? அதாவது நீ கமலா தியேட்டர்ல போய் 'ப்ளூ சட்டை இங்க வரவே இல்லை. பயந்துட்டான்'னு ட்வீட் போட்டு ஊரை ஏமாத்தத்தான இப்படி ஒரு மொக்கையான ப்ளான் போட்ட? ஏன்டா இப்படி LKG பசங்க ரேஞ்சுக்கு இருக்கீங்க?' என்று கூறி இருந்தார். அவர் சொன்னதை போலவே நேற்று ஜெயிலர் படத்தை பார்த்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் இன்று அதிகாலை ஜெயிலர் படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை. அதில் எதிர்பார்த்தது போலவே இந்த படத்தை கழுவி ஊற்றி இருக்கிறார். அதிலும் 'டார்க் காமெடி படம் என்றால் நடிப்பவர்கள் சீரியஸாக இருப்பார்கள் பார்க்கும் நமக்கு காமெடியாக இருக்கும். ஆனால், இந்த இங்கே படத்தில் காமெடி செய்கிறார்கள் பார்க்கும் நமக்கு தான் சீரியஸ் ஆகிவிடுகிறது என்று கூறி ட்ரோல் செய்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full