ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து தான். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது.

அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இந்த பாடல் வரிகள் மட்டும் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தனர். மேலும், ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் அவர்கள் விஜய் பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்று பேசி இருந்தார். அதே போல ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கழுகு காகா கதையும் விஜய்யை குறிப்பிட்டு சொன்னதாக விஜய் ரசிகர்கள் பலரும் ரஜினி மீது கடுப்பானார்கள்.

Advertisement

இதனால் ஜெயிலரை failure ஆகிகுவோம் என்று விஜய் ரசிகர்கள் சபதம் போட்டனர். ஆனால், விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் நாள் தமிழக வசூலை ஜெயிலர் படத்தால் முறியடிக்க முடியவில்லை. விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தையும் நெல்சன் தான் இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் பெரும் ட்ரோல்களுக்கு உள்ளானதோடு நெல்சனுக்கு மிகப்பெரிய சரிவை கொடுத்தது. இதனால் நெக்லனுக்கு ஜெயிலர் படத்தின் வாய்ப்பே பறிபோகும் நிலை வரை வந்தது.

ஆனால், பீஸ்ட் படத்தில் விட்டதை ஜெயிலர் படத்தில் நெல்சன் பிடித்துவிட்டார். அதே போல அண்ணாத்த படத்தால் சறுக்கிய ரஜினி ஜெயிலர் படத்தால் மீண்டு வந்துவிட்டார். இருப்பினும் தமிழகத்தில் முதல் நாள் வசூலில் பீஸ்ட் படத்தின் வசூலை முறியடிக்க ஜெயிலர் படம் தவறவிட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் 34 கோடி வசூலித்து இருந்தது. ஆனால், ஜெயிலர் திரைப்படம் 23 கோடி தான் வசூலித்து இருக்கிறது.

Advertisement

ஆனால், வாரிசு படத்தின் இந்தியா மற்றும் தமிழ் நாடு வசூலை ஜெயிலர் திரைப்படம் முந்தியுள்ளது. வாரிசு திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் 26.5 கோடியும் தமிழ் நாடு அளவில் 17 கோடியும் வசூலித்து இருந்தது. ஆனால், ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் இந்த அளவில் 52 கோடியும் தமிழக அளவில் 23 கோடியும் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது.

Advertisement

அதே போல வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையையும் முன்னிட்டு வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தான் தான் சூப்பர் ஸ்டார் என்று மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினி. அதே போல முதல் நாள் எப்போதும் படங்களுக்கு வசூல் அதிகமாக தான் இருக்கும் அப்படி இருந்தும் வாரிசு திரைப்படம் முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் படு கேவலமான விமர்சனத்தை பெற்றதால் இரண்டாம் நாளே படத்தின் வசூல் படுத்தது. ஆனால், ரஜினியின் ஜெயிலர் படம் முதல் நாளே நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் இனி வரும் நாட்களில் வசூல் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement