பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜெயிலர் படத்தின் "காவாலா" பாடல் வெளியானது - உற்சாகத்தில் ரசிகர்கள்

By Manikandan · 6/7/2023

கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தெடர்ந்து சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து வந்தன. ஆனால் கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. குறிப்பாக கடைசியாக வந்த "அண்ணாத்த" திரைப்படம் மோசமான வம்சங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது.

இந்த சூழ்நிலையை அடுத்து நடிக்க இருக்கும் படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்து வரும் ரஜினி தற்போது "ஜெயிலர்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை எனவே இவருக்கு "ஜெயிலர்" படத்தின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதினால் மும்முரமாக படம் இயக்குவதில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இடபடத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் இவருடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.மேலும் சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

https://youtu.be/RVLNBVK8auM

இப்படத்தில் ரஜினிக்கு முத்துவேல் பாண்டியன் என்ற பெயரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இப்படிப்பட்ட நிலை இந்த படத்தின் முதல் பாடலான "காவாலா" இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி இருக்கிறது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த பாடலானது துள்ளல் அதிகம் உள்ள கலக்கலான பாடலாக வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

இந்த பாடலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகிய நிலையில் அதில் இயக்குனர் நெல்சன் அனிரூத்திடன் சென்று முதல் சிங்கிள் தயார் செய்து சொல்வது போன்றும் அருண் காமராஜ் பாடலை எழுது செல்வது போன்று ஒரு வேடிக்கையான புரோமோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அது இந்த முதல் சிங்கிலிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதே போன்றுதான் பீஸ்ட் பாடலுக்கும் புரோமோ வெளியாகி யூடியூபில் ட்ரெண்டாகி இருந்தது குறிபிடித்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full