ஏர்போர்ட்டில் நடந்த தள்ளு முள்ளு, அதிரடியாக கைது செய்யப்பட்ட ஜெயிலர் பட நடிகர்- நடந்தது என்ன?
ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயனை கைது செய்திருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரலாகி உள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் விநாயகன். இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த 'திமிரு' என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் சிலம்பாட்டம், காளை, சிறுத்தை, மரியான், ஜெயிலர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். அதேபோல் இவர் மலையாளத் திரையுலகிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழில் இவர் பல படங்கள் நடித்தாலும், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தில் விநாயகனின் நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஜெயிலர் படம்:
தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. ஆனால், நடுவில் சில ஆண்டுகள் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. அதனால், இவர் ஜெயிலர் படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்திருந்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
நல்ல வரவேற்பு:
படத்தின் ஒவ்வொரு பாடலும் பட்டையை கிளப்பியிருந்தது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் கிருஷ்ணன், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, நல்ல வசூல் சாதனையும் செய்திருந்தது. மேலும், படத்தில் வர்மன் கதாபாத்திரத்தில் நடித்த விநாயகனுக்கு நல்ல பெயரும் கிடைத்தது.
விநாயகன் கைது:
இந்நிலையில் கொச்சியில் இருந்து ஹைதராபாத் வழியாக கோவாவுக்கு செல்லும் இண்டிகோ விமானத்தில் விநாயகன் பயணித்துள்ளார். இந்த விமானம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது. அப்போது அங்குள்ள பயணிகள் அறையில், அங்கு இருந்த பாதுகாப்பு படை வீரர்களுடன் விநாயகன் தகராறு செய்துள்ளார். குறிப்பாக ஒரு பாதுகாப்பு படை வீரரை தாக்கியுள்ளார். அதனால் பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்து உள்ளனர்.
https://www.youtube.com/shorts/gmUpEwYmRgM
விநாயகன் வீடியோ:
அப்போது அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விநாயகன், நான் எந்த தவறும் செய்யவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் தான் என்னை தனி அறைக்கு அழைத்துச் சென்று, என்னை தாக்கினார்கள்' என்று கூறியுள்ளார். ஏற்கனவே இது போல் பொது இடத்தில், போதையில் அநாகரிகமாக நடந்து கொண்டார் என்றும், காவல்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும்கைது விநாயகன் செய்யப்பட்டார். அதற்குப் பின் பெயிலில் வெளி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.