தை மாதம் என்றாலே அனைவருக்கும் முதலில் நியாபகத்திற்கு வருவது பொங்கல் தான். கொரோனா தாக்கத்திற்கு பிறகு இந்த ஆண்டு இந்தியா முழுவதும் சில தினங்களாகவே பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கல் என்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி இருந்தார்கள். மேலும், மாட்டு பொங்கல் அன்று கிராமங்களில் தமிழ் நாட்டு கலாச்சார நிகழ்வுகளும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடந்தது.

அதிலும் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக்கு புகழ் போன மதுரை அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனால் தமிழக அரசும் பல நெறிமுறைகளை விதித்திருக்கிறது.

Advertisement

300 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி :

அதன்படி ஜல்லிக்கட்டு போட்டியில் 300 வீரர்களும், 150 பார்வையாளர்கள் பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதாலும், மூன்றாம் அலையின் பரவல் அதிகரித்து வருவதாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும், போட்டி நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பே கோரோனா நெகட்டிவ் சான்றிதழை போட்டியாளர்கள் கொடுத்தார்கள்.

கட்டுப்பாடுகளுடன் நடந்த ஜல்லிக்கட்டு :

இப்படி தமிழ்நாடு அரசு அறிவித்த கட்டுப்பாடுகளின் படி தான் போட்டி நடந்தது. அதுமட்டும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள், காளைகளின் உரிமையாளர்கள் என அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருந்தார்கள். இதனால் தமிழகம் முழுவதும் நேற்று மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் இளைஞர்கள் எல்லோரும் சந்தோஷத்துடன் காளைகளை அடக்கினார்கள். இதில் பலர் காயமடைந்தும் வெற்றி பெற்றும் இருக்கிறார்கள்.

Advertisement

சீறிப் பாய்ந்த காளை :

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், பீரோ, கட்டில், ரெப்ரிஜிரேட்டர், வாசிங்மிசின், எவர்சில்வர் பாத்திரம் என பல பரிசுப் பொருள்களை வழங்கி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் காளையை ஒரு கையாலே அடக்கி நிறுத்தின வீரரின் வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. பொதுவாகவே செல்லப்பிராணிகள் தான் வளர்க்கும் உரிமையாளர்களுக்கு நன்றி உள்ளதாக இருக்கும். இது நாய் மட்டும் இல்ல எல்லா வகை பிராணிகளுக்கும் பொருந்தும் என்பதை தற்போது இந்த வீடியோ மூலம் நிரூபித்துள்ளது.

Advertisement

உரிமையாளரை பார்த்ததும் அடங்கிய காளை :

நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் தான் வளர்த்த காளையை உரிமையாளர் அவிழ்த்து விட்டிருக்கிறார். அந்த காளை எல்லோரையும் முந்திக் கொண்டு வேகமாகவும், முரட்டுத்தனமாகவும் ஓடிவந்தது. ஆனால், தான் வளர்த்த உரிமையாளர் ஒரு கை அசைத்ததும் குழந்தை போல மாறி அந்த காளை அமைதியாக நின்று விட்டது. தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் இதுதாங்க உண்மையான பாசம், நன்றி தனம் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement