90ஸ் கிட்ஸ்களை மிரள வைத்த ஜமீன் கோட்டை பட நடிகை என்ன ஆனார்? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

By Rajkumar · 24/12/2023

ஜமீன் கோட்டை படத்தில் பேயாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையின் தற்போதைய நிலை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் 80, 90 கால கட்டத்தில் நடித்த குணச்சித்திர வேடங்களில் நடித்த பல நடிகர், நடிகைகள் தற்போது என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை. சில பேர் தற்போதும் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

அதில் சில நடிகைகள் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டில் ஆகிவிடுகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சீதா. இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்து இருக்கிறார். அதிலும், இவர் ஜமீன் கோட்டைஎன்ற படத்தில் பேயாக நடித்து அசத்தி இருப்பார். அதனை தொடர்ந்து இவர் பிரியங்கா, வியாபாரி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

சீதா யாஸ்மின் குறித்த தகவல்:

மேலும், முதலில் இவருடைய பெயர் சீதா என்று தான் இருந்தது. அதற்கு பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவர் தன்னுடைய பெயரை யாஸ்மின் அயாஸ் என்று மாற்றிக் கொண்டார். அதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கிறார்.

சத்யா சீரியல்:

அதுவும் சன் டிவியில் பல பிரபலமான தொடர்களில் சீதா யாஸ்மின் நடித்து இருக்கிறார். அதற்கு பிறகு சில வருடங்களாக இவர் சினிமாவில் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். பின் இவர் என்ன ஆனார்? என்று தெரியாமல் இருந்தது. மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த தொடரில் டாம் பாய்யாக நடித்த சாயிஷா பல இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமானதால் இரண்டு பாகம் ஒளிபரப்பாகி இருந்தது.

சீதா யாஸ்மின் நடித்த சீரியல்:

மேலும், இந்த சீரியலில் சீதா யாஸ்மின் கதாநாயகிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போது இவர் நடித்துக் கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். நடனம் ஆடுவது, ரில்ஸ் செய்வது என ஏதாவது ஒன்று செய்து சோசியல் மீடியாவில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இதனால் இவரை ரசிகர்களும் பாலோ செய்கிறார்கள். தற்போது இவருடைய சமீபத்திய புகைப்படம் தான் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த பலருமே இவர் தான் ஜமீன் கோட்டை படத்தில் பேயா நடித்தவரா! ஆள் அடையாளமே தெரியவில்லையே? என்று வியப்பில் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full