இந்த தண்டனை அவங்களை போதாது, வன்மத்தின் உச்ச கட்டம் - ரெட் கார்ட் பற்றி ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 94 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் நடந்த கார் டாஸ்க்கில் சான்ட்ராவை காரில் இருந்து பார்வதி- கம்மு இருவரும் சேர்ந்து கால், கையில் தள்ளியும் உதைத்தும் கீழே தள்ளி விட்டிருந்தார்கள்.
இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வந்தார்கள். பின் விஜய் சேதுபதி, பார்வதி- கம்மு இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நேற்று Facebook நண்பர் ஒருவர், "இன்று BiggBoss நிகழ்ச்சியில் இருவருக்கு Red Card கொடுக்கப்போகிறார்கள், அதைப் பாருங்கள்" என்று ஒரு செய்தி சொன்னார். நான் இம்முறை இந்நிகழ்ச்சியைப் பார்க்கவேயில்லை. யார் யார் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாது. ஆனால், இந்த சிவப்பு அட்டை விஷயம் என்னை ஈர்த்தது. ஏனெனில் இது ரொம்ப அபூர்வம்.
பிக் பாஸ் 9:
முந்தைய சில பகுதிகளில் சிலருக்கு இதைச் செய்திருக்க வேண்டும் என்று நானெல்லாம் குரலெழுப்பினேன், கொடுக்கப்படவேயில்லை. நேற்று நள்ளிரவு இந்தப் பகுதியை மட்டும் forward செய்து பார்த்தோம், நானும் என் மனைவியும். என் மனைவி அதிலுள்ள சிலரை அறிந்து வைத்திருந்தார். எங்கள் வீட்டுப் பணிப்பெண் மூலமாக. "இந்த பார்வதி கெட்டவள். இந்தக் கம்ருதீன் அவள் கூடச் சேர்ந்து கெட்டுப்போய் விட்டான். அதனால் அவனுக்குக் கெட்ட பெயர். இந்த அரோரா ஏதோ கெட்ட நிகழ்ச்சி செய்து பிரபலமானாரம்" போன்ற முத்துமுத்தானத் தகவல்களை அள்ளி வீசிக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார்.
எனக்கு எல்லாம் புதிது, Sandra-வைத் தவிர.
ஜேம்ஸ் வசந்தன் பதிவு:
நான் இசையமைத்து வெளிவராத ஒரு சிறிய பட்ஜெட் படத்தில் இவர்தான் நாயகி. வெளியேற்றும் அளவுக்கு என்ன செய்தார்கள் எனத் தெரிந்துகொள்ள முந்தைய நாள் கார் சவால் பகுதியைப் பார்த்தோம். பார்வதியும் கம்ருதீனும் Sandra-வை காரிலிருந்து உதைத்துக் கீழே தள்ளியது, அதுவரை அவர்கள் இருவரும் சேர்ந்து அவரைக் கேவலமாக, எள்ளி நகையாடி அசிங்கமாகப் பேசியதைவிட மோசம். அடிப்படை மனிதாபிமானம் இல்லாத ஒரு இழிச்செயல். அவர்கள் வெளியே அனுப்பப்பட்டது கூட இதற்குப் போதாது. இரு குழந்தைகளின் தாயான அந்தப் பெண்ணை, கம்ருதீன் வாடி போடி என்று கொஞ்சம்கூடப் பண்பில்லாமல் ரொம்ப நேரம் திட்டி அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தது தவற்றின் உச்சம்.
ரெட் கார்ட் விவகாரம்:
90 நாட்கள் அந்த வீட்டில் இருந்தார்களாம் அந்த இருவரும். ஆனால் அதற்கான இவர்கள் சம்பளம் இவர்களுக்குக் கிடைக்காதாம். சிவப்பு அட்டைத் தண்டனையின் ஒரு அம்சம் அது. வெளியேறும் முன் சான்ட்ரா காலில் விழுந்து மக்களைக் கொஞ்சம் சமாதானப்படுத்த முயன்றான் கம்ருதீன். கோபத்தின் உக்கிரத்தில் ஏதோ பேசிவிட்டு வருந்துவது மனித இயல்பு. ஆனால் இவர்கள் இருவரும் தொடர்ந்து பலமணி நேரம் அந்தப் பெண்ணை வன்சொற்களால் நிந்தித்தது பார்க்கிற நமக்கே தாங்க இயலாததாக இருந்தது.
இந்நிகழ்ச்சியை நான் விரும்பக் காரணமே, இந்த உளவியல் கண்காட்சிதான். எங்கு கிடைக்கும் இப்படி ஒரு case study வாய்ப்பு? என்று பதிவிட்டு இருக்கிறார்.