இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் குறித்து சீமானின் சர்ச்சை கருத்து - ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு.

By Siva · 2/8/2023

கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளர் சீமான் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமியர்களை தரக்குறைவாக பேசியது போன்ற விடியோக்கள் இணையத்தில் பரவிவருகிறது. சீமானின் பேச்சுக்களை பொறுத்த வரைக்கும் அது மக்களிடம் பெரிய வரவேற்ப்பை பெரும் இருப்பினும் அவரின் சில கருத்துகள் சில நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி தற்போது தமிழகத்தில் வளர்ந்து கொண்டு இருக்கும் கட்சியாக இருக்கிறது. ஆனால் தற்போது சீமான் பேசிய பேச்சுக்களானது அக்கட்சியின் தொண்டர்களிடம் இடமே அதிருப்தியை ஏற்படுத்தியது.  

மணிப்பூரில் நடைபெற்ற சம்பவங்களை கண்டித்து திருவள்ளுவர் கோட்டத்தில் ஜூலை 30 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சீமான் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்களை பற்றி அவதுறாக பேசிய பேச்சுக்கள் தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சீமான் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பிரனரும் பல கண்டனகளை தெரிவித்து வருகின்றனர்.

அக்கூட்டத்தில் பேசிய சீமான் ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டு நிற்கும் மணிப்பூர் மக்களை பற்றி பேசி நமக்கு ஒரு லாபமும் இல்லை எனவும் அங்குள்ள கிறித்துவர்கள் ஓட்டுபோட போவதில்லை எனவும் இங்கு உள்ள கிறித்துவர்களும் நமக்கு ஒட்டு போட போவதில்லை என்றும் அக்கூட்டத்தில் அவர் பேசியிருந்தார்.மேலும் கூறிய அவர் நாம் தான் இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் தேவனின் குழந்தைகள் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அவர்கள் சாத்தனின் குழந்தைகளாக மாறி பல வருடங்கள் ஆகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் கூறிய அவர் “இந்த நாட்டில் அனைத்து அநிதிக்கும் அக்கிரமத்திற்கும் பெரிய பொறுப்பு கிறித்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தான்” எனவும் அவர் கூறினார். மேலும் கூறிய “தொடர்ச்சியாக 18% விழுக்காடு ஓட்டு வைத்திருக்கும் பல ஆண்டுகளாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டு போட்டு நாட்டை தெருவில் விட்டது இவர்கள் தான். நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு காரணமே இவர்கள் தான் இவர்களிடம் போய் என்ன பாவத்தை ஒப்புக்கொள்வது இவர்கள்தான் பாவத்தையே செய்கிறார்கள்?”. என்றும் அவர் கூறினார்.

சீமானின் இந்த கருத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து பதிவிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன் ' சீமான் அவர்கள் சொன்ன ஒரு கடுமையான கருத்தைக் குறித்து பலர் என்னிடம் கருத்து கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். என்னை அது ஒன்றும் பாதிக்கவில்லை. இவர் யாரைத் திட்டினாரோ, அவர்களுக்கு எந்த இழப்புமில்லை; இவருக்குக்குத்தான் பெரிய இழப்பு. ஏனென்றால், இவர் வாக்கு அரசியலில் இருப்பவர் ' என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்க்கனவே, நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் 'இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும் அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, தியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல... "இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.

இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்",பொறுமை காக்க வேண்டும் என்று,இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்... இந்தப்பொறுமையை, தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்' என்று பதிவிட்டுள்ளார். ராஜ்கிரணின் இந்த பதிவு சீமானை குறிப்பிட்டு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஜேம்ஸ் வசந்தனின் இந்த கருத்து பேசுபொருளாகி இருக்கிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full